வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நைட் பார்ட்டியில் நடிகர் செய்த சேட்டை.. எகிறி குதித்து ஓடிய ஆன்ட்டி நடிகைகள்

Gossip: திரை பிரபலங்களை பொறுத்தவரையில் பார்ட்டி கொண்டாட்டம் எல்லாமே சகஜம் தான். அதிலும் சனிக்கிழமை வந்துவிட்டாலே இசிஆர் பக்கம் அமர்க்களமாக இருக்கும்.

சின்னத்திரை பெரிய திரை பிரபலங்கள் என அனைவரும் பார்ட்டி கொண்டாடி என்ஜாய் செய்வார்கள். இதற்கெல்லாம் பெரிய காரணம் எதுவும் தேவையில்லை.

லவ் ஆரம்பித்ததில் தொடங்கி டைவர்ஸ் வரை எல்லாத்துக்குமே பார்ட்டி தான். அப்படித்தான் சமீபத்தில் ஒரு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்திருக்கிறது.

அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு என்ஜாய் செய்திருக்கின்றனர். அப்போது அந்த உயர்ந்த நடிகரும் பார்ட்டிக்கு வந்திருக்கிறார்.

எகிறி குதித்து ஓடிய ஆன்ட்டி நடிகைகள்

அவரை பார்த்ததுமே அங்கு இருந்த சில நடிகைகள் ஜெர்க் ஆகி இருக்கின்றனர். ஏனென்றால் மனுஷன் பார்ட்டிக்கு வந்தாலே ஒரு அலப்பறை கொடுக்க ஆரம்பித்து விடுவார்.

அது தெரிந்த பல நடிகைகள் பேசாமல் கிளம்பி விடலாமா என்று கூட யோசித்து இருக்கிறார்கள். ஆனால் நடிகர் வந்தவுடன் அனைவரிடமும் சாதாரணமாக ஹாய் ஹலோ சொல்லி பேசி இருக்கிறார்.

ஆனால் நேரம் செல்ல செல்ல தலைவருக்கு மப்பு அதிகமாகி இருக்கிறது. அதை அடுத்து நடிகைகளை கட்டிப்பிடிப்பது கமெண்ட் அடிப்பது என சேட்டை செய்திருக்கிறார்.

இதனால் அங்கு வந்திருந்த ஆன்ட்டி நடிகைகள் கூட சங்கடத்தில் நெளிந்திருக்கின்றனர். அதன் பிறகு உடன் இருந்தவர்கள் எப்படியோ நடிகரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்களாம்.

Trending News