திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

Gossip: சினிமாவில் மட்டுமல்லாமல் சாதாரணமாக வேலை செய்யும் பெண்கள் இடமும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடந்து தான் வருகிறது. ஆனாலும் சினிமாவில் உள்ள பிரபலங்கள் இப்போது தங்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக சமூக ஊடகங்களில் சொல்லி வருகிறார்கள்.

அவ்வாறு நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதாவது பெரிய நிறுவனங்களில் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருக்காது என்றும், உப்புமா கம்பெனிகளில் தான் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு டார்ச்சர் நடந்து வருவதாக நடிகை சொல்லி உள்ளார்.

அதாவது பட வாய்ப்புக்காக நடிகை சென்றபோது சில அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றனர். ஆரம்பத்தில் நடிகைக்கு இது பற்றி சரியாக தெரியாத காரணத்தினால் சம்பளம் போன்றவற்றில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கும் என்று நினைத்துக் நடிகை பேசியிருக்கிறார்.

Also read: அக்கட தேசத்திலும் வேலையை காட்டிய நம்பர் நடிகை.. அடித்து தொரத்தி விட்ட ஹீரோவின் மனைவி

அதன் பிறகு தான் அவர் விளக்கமாக கூறுகையில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கேமராமேன் என படப்பிடிப்பு பலரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன நடிகை தனக்கு பட வாய்ப்பு வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டாராம்.

மேலும் அட்ஜஸ்மென்ட் டார்ச்சரால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் நடிகை கூறியிருக்கிறார். மேலும் இதற்காக எந்த நடிகையையும் வற்புறுத்துவதும் இல்லை. ஆகையால் தங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஆஃபர் வந்தால் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற நடிகை கூறியிருக்கிறார்.

Also read: வாய்ப்புக்காக எல்லை மீறி நடிக்கும் சின்னத்திரை நடிகை.. ஹீரோவிடம் நெருக்கம் காட்டி குடும்பத்தை பிரித்த சகுனி

Trending News