சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

Vijay Tv: 3 முறை விஜய் டிவி நடிகைக்கு வந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்.. அம்மாவையும் விடல, சினிமா விட சீரியல் பெஸ்ட்

Vijay Tv Serial Actress Adjustment Torture: திரையுலகில் எந்த நடிகைகளிடம் கேட்டாலும் அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற ஒரு வார்த்தை ரொம்பவே தலைவிரித்து ஆடுகிறது என்று ஆதங்கத்தை கொட்டும் அளவிற்கு அவர்களுக்கு மிகப்பெரிய ரணவிதையை கொடுத்திருக்கிறது. அந்த காலத்திலிருந்து இப்பொழுது வரை இந்த ஒரு விஷயம் மட்டும் மாறாமல் இருக்கிறது.

ஆனால் அப்போதெல்லாம் கமுக்கமாகவே இருந்த விஷயம் தற்போது சோசியல் மீடியா அனைவரது பாக்கெட்டிலும் இருப்பதால் மூலை முடுக்குகளில் என்ன நடந்தாலும் அது அப்பட்டமாக வெளிவந்து விடுகிறது. அத்துடன் இப்பொழுது இந்த ஒரு விஷயத்தை யாரும் மூடி மறைப்பதாக இல்லை. இதைப் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்

அப்படி விஜய் டிவி சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரை பற்றி அவரே கூறியிருக்கிறார். அதாவது சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த சம்யுக்தா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்படி கிடைத்த பொழுது இவருக்கு இரண்டு முறை நேரடியாக ப்ரொடக்ஷன் கம்பெனியிலிருந்து போன் பண்ணி அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த மாதிரி பொண்ணு நான் இல்லை. எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு தேவையே இல்லை என்று கூறி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இவருடைய அம்மாவிற்கு ஃபோன் வந்திருக்கிறது. பொதுவாக இவர் எந்த ஒரு காஸ்டிங் இயக்குனர்களிடம் இவருடைய நம்பரை சேர்த்து இவரின் அம்மா நம்பரையும் கொடுத்து இருக்கிறார். அதனால் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி இந்த மாதிரி உங்கள் மகளுக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன் எப்பொழுது வரவேண்டும் என்ன கேரக்டர் எவ்வளவு சம்பளம் போன்ற விவரங்களையும் பேசி இருக்கிறார். இதை கேட்ட சம்யுக்தா அம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டு இருக்கிறார். உடனே எப்பொழுது ஆடிஷனுக்கு வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் ஆடிஷன் தேவை இல்லை. நேரடியாக சூட்டிங் தான் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் எங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனைக் கேட்ட இவருடைய அம்மா இப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறியிருக்கிறார். இந்த மாதிரி வெள்ளித்திரையில் நடிப்பதற்கு மூன்று முறை எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வந்திருக்கிறது.

அந்த வகையில் எனக்கு சீரியலில் நடிக்கும் பொழுது இந்த மாதிரி எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை. அதனால் எனக்கு எப்பொழுதுமே சினிமாவை விட சீரியல் தான் பெஸ்ட் என்று சொல்வேன் என சம்யுக்தா கூறியிருக்கிறார்.

சமீபத்தில் தான் இவரும் நடிகர் விஷ்ணுகாந்தம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். அப்பொழுது இவர் வைத்த குற்றச்சாற்று என்னவென்றால் விஷ்ணுகாந்த் உடல் ரீதியாகவும், உறவு ரீதியாகவும் மிகவும் டார்ச்சர் செய்ததாக தான் கூறி மிகவும் பரபரப்பை கிளப்பினார்.

தற்போது இதையெல்லாம் தாண்டி சீரியலில் நடிக்கும் வாய்ப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

Trending News