புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் கொடுத்த அட்வைஸ், பாக்கியத்தை தலைமுழுகிய மகள்.. சரவணன் கிட்ட மாட்டி தவிக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், மகன்களிடம் ரொம்பவே காரராக இருப்பதால் ஒற்றுமை போய்விடுமோ என்ற குழப்பத்தில் கோமதி இருக்கிறார். இதனால் இல்லாமல் தவித்த கோமதி பிள்ளைகள் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க வருகிறார். ஆனால் மூன்று பிள்ளைகளும் பழனிச்சாமி உடன் சந்தோஷமாக சிரித்து பேசி விளையாடுகிறார்கள்.

இதை பார்த்ததும் கோமதி சந்தோஷப்பட்டு, பழனிச்சாமியை திட்டி இப்படி இருக்க பிள்ளைகளுக்குள் சண்டை வரவே செய்யாது. நீ என்னை போட்டு குழப்பாதே என சொல்லிவிட்டு போகிறார். அடுத்ததாக ராஜி மீனா கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே தங்கமயில் வருகிறார். ஆனாலும் கோமதிக்கு இருக்கும் கோபத்தினால் தங்கமயிலை பார்த்து பேசாமல் போய்விடுகிறார்.

அப்பொழுது தங்கமயில் அழுது யாருமே என்னிடம் பேச மாட்டார்கள். இந்த ஹோட்டல் பிரச்சினைக்கு பிறகு சரவணன் மாமாவும் என்னிடம் வந்து பேசி ஆறுதல் சொல்லவில்லை. நான் சாப்பிடவும் இல்லை என்று தெரிந்தும் என்னை சமாதானப்படுத்தவும் இல்லை என்று சொல்கிறார். உடனே மீனா, நேத்து மாமாவிடம் சாப்பாடு கொடுத்து விட்டேன். நீங்க சாப்பிடவில்லையா என்று கேட்கிறார்.

அதற்கு தங்கமயில், அப்படி என்றால் சரவணன் மாமா என் மீது அக்கறையில் கொண்டு வரவில்லையா நீங்க தான் சொல்லிக் கொடுத்தீர்களா என்று கேட்கிறார். உடனே இதற்கும் சேர்த்து வைத்து அல்லது என் மீது யாருக்கும் பாசமே இல்லை என்று மீனா தோளில் சாய்ந்து புலம்புகிறார். அந்த வகையில் தங்கமயிலிடம் பாண்டியன் குடும்பம் மாட்டவில்லை. சரவணனிடம் தான் தங்கமயில் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் முழிக்க போகிறார்.

இதனை அடுத்து பாண்டியன், மகன்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே தங்கமயில் வருகிறார். அப்பொழுது தங்கமயிலுக்கு பாண்டியன் அட்வைஸ் பண்ணுகிறார். இனிமேல் எல்லாம் தெரிந்த மாதிரி போனில் எதுவும் ஆர்டர் போட வேண்டாம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து கவனமாக தான் செய்ய வேண்டும். இனி இந்த மாதிரி பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள் என்று சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தங்கமயில் நீலி கண்ணீர் வடிக்கும் போது செந்தில் இந்த விஷயத்தை டைவர்ட் பண்ணும் விதமாக அடுப்பாங்களில் இருந்து ஏதோ கருகுன வாசம் வருகிறது போய் பாருங்க அண்ணி என்று சொல்கிறார். உடனே தங்கமயில் எதுவும் இல்லையே என்று சொல்கிறார். அப்போது கதிரும் தங்கமயிலை பாண்டியனிடமிருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சேர்ந்து பொய் சொல்லி அடுப்பாங்கரைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

அங்கே போன தங்கமயிலுக்கு கோமதியும் முகம் கொடுத்து பேசாமல் திட்டுகிறார். பிறகு அங்கிருக்கும் மீனா மற்றும் ராஜி தான் கோமதியை சமாதானப்படுத்தி தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் இவ்வளவு பிரச்சனை நடந்த பின்பும் தங்கமயில் தனியாகத்தான் அழுது புலம்பி தவித்தாரே தவிர, எப்பொழுதும் போல பாக்கியத்துக்கு போன் பண்ணி பேசி பிரச்சினையை பெரிதாக விரும்பவில்லை.

அம்மாவிடம் பேசலாமா என்று தோன்றிய பொழுது கூட வேண்டாம் பேசினாலும் தேவையில்லாத பிரச்சினைகள் தான் வரும் என்று புரிந்து கொண்டு பாக்கியத்திடம் பேசுவதை விட்டுவிட்டார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேசாமல் இருந்தாலே தங்கமயிலின் வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.

Trending News