ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தாழ்வு மனப்பான்மையால் மாரி செல்வராஜுக்கு வந்த ஆக்ரோஷம்.. டாப் ஹீரோக்களை வைத்து வண்ணம் தேடும் அவலம்

Mari Selvaraj: அண்மைக்காலமாகவே மாரி செல்வராஜ் பெயர் தான் சோசியல் மீடியாவில் அதிகம் அடிபட்டு வருகிறது. மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆரம்பித்து வைத்த சர்ச்சை இப்போதும் கூட முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதில் தற்போது டாப் ஹீரோக்களை வைத்து புது பிரச்சனையை அவர் கிளப்பி இருப்பது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இது ஒரு விதத்தில் அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையின் ஆக்ரோஷமான வெளிப்பாடு தான். அதாவது இதுவரை எந்த ஒரு நடிகரின் ரசிகர்களும் ஜாதியை வைத்து அவர்களை கொண்டாடியது கிடையாது.

Also read: மாரி செல்வராஜுக்கு போட்டியாக வரும் சசிகுமார்.. மாமன்னனை ஓரங்கட்ட வரும் அரசியல் கதை

அவ்வளவு ஏன் விக்ரம், பிரசாந்த் போன்ற நடிகர்கள் தங்களுடைய ஜாதிகளை வெளிக்காட்டும் படியாக நடந்து கொண்டது கிடையாது. ஆனால் டாப் ஹீரோக்களை ஜாதி ரீதியாக பிரித்து தனக்கான ஒரு வண்ணத்தை மாரி செல்வராஜ் தேடி கொள்கிறார். இது ஒரு வகையில் மனக் குரோதத்தை வளர்க்கும் படியாகவும் இருக்கிறது.

நன்றாக சென்று கொண்டிருந்த திரையுலகில் சமீபகாலமாக ஜாதிய பிரச்சனைகள் குறித்த படங்கள் வெளிவருவது அதிகமாகிவிட்டது. அதிலும் மாரி செல்வராஜ் இயக்கிய மூன்று படங்களும் அப்படி ஒரு விஷயத்தை உள்ளடக்கியதாக தான் இருக்கிறது. இது குறித்து பல கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also read: விஷ செடியாக வளர்ந்து வரும் மாரி செல்வராஜ் திட்டங்கள்.. படம் மூலமாக திணிக்க நினைக்கும் நரி மூளை

ஆனாலும் இவர் சில நடிகர்களை எங்கள் ஜாதி என்று காட்ட முற்படுவது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அதாவது மாமன்னனில் பிரசாந்த் படத்தை வைத்து இவர் எங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர் என மாரி செல்வராஜ் காட்டியிருக்கிறார். இதுவே அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அப்பட்டமாக காட்டி இருக்கிறது.

மேலும் இது இன்றைய தலைமுறைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது. அது மட்டுமின்றி தன் ஆழ் மனதில் இருக்கும் கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் அவர் தொடர்ச்சியாக தன் படங்களில் வெளிப்படுத்தி வருவதும் அவ்வளவு உவப்பாக இல்லை. இனிமேலும் அடுத்தடுத்த படங்களில் அவர் இதையே தான் சொல்வார் என்ற பட்சத்தில் இவர் படத்தில் நடிப்பதற்கு கூட பலரும் யோசிக்கும் நிலை ஏற்படலாம்.

Also read: உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

Trending News