வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

9 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. விஜய்க்காக தயாராகும் 100வது படத்தின் கதை

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதையடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் இன்னும் சில திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் ஜீவா, விஜய் குறித்து ஒரு அட்டகாசமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Also read : சூட்டிங்கிற்கு முன்பே பல கோடிகளை அள்ளிய தளபதி 67.. இது தான் வியாபார தந்திரமா!!

அதாவது விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் ஜீவாவின் தந்தை ஆர் பி சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை அவர் தயாரித்திருக்கிறார். தற்போது மலையாள திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் ஆர் பி சவுத்ரி விரைவில் விஜய்யை வைத்து நூறாவது திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

Also read : பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!

விஜய் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடைசியாக ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் இணை இருக்கிறார்.

அந்த வகையில் விஜய்க்காக ஒரு சூப்பரான ஆக்சன் கதையும் தயாராகி வருகிறதாம். இந்த தகவலை ஜீவா ஒரு தனியார் ஓடிடி நடத்திய விழாவில் கலந்து கொண்ட போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தில் ஜீவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் நண்பன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read : 10 வருடமா படங்களே ஓடாமல் ஜீவா படும் பாடு.. கோடிக்கணக்கில் செலவு செய்ததால் வந்த வினை

Trending News