வந்த வேகத்திலேயே காணாமல் போன கூட்டணி.. பெரும் மன உளைச்சலில் இருக்கும் கவின்

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடிக்கும் அடுத்த படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தில் பிரியா மோகன் கதாநாயகி, முக்கியமாக அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல்கள் வந்தன.

கவின் படத்திற்கு அனிருத் இசையமைப்பதால் கண்டிப்பாக பாடல் ஹிட் ஆகிவிடும், படமும் சூப்பர் ஹிட் கொடுக்கும். இதனால் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு சென்று விடலாம் என்று கவின் ஆசையாக இருந்தார். ஆனால் அவருடைய ஆசையில் மண்ணள்ளி போட்டு விட்டார் அனிருத்.

Also Read: அசுர வேகத்தில் உருவெடுக்கும் இரண்டு இளம் ஹீரோக்கள்.. டாடாவிற்கு டஃப் கொடுக்கும் தூங்கு மூஞ்சி

இசையமைப்பாளராக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத்துக்கு திடீரென்று நடிக்க ஆசை வந்துவிட்டது. அதற்கு ஏற்றார் போல் அனிருத் ஒரு படத்தில் முக்கிய இரட்டை கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார்.

இந்த படம் கூடிய விரைவில் துவங்க உள்ளது. அதை காரணமாக காட்டி கவின் நடிக்கும் படத்தை வேண்டாம் என்று மறுத்தார் அனிருத். இதனால் கவின் அடுத்த படத்தை இசையமைப்பது இசையமைப்பாளர் அனிருத் இல்லை என்றதும் அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

Also Read: ஒரு ஹீரோவுக்கு மற்றொரு நடிகர் பாடிய 5 பாடல்கள்.. சூர்யாவை குத்தாட்டம் போட வைத்த விஜய்

மிகப்பெரிய அடுத்த கட்ட வெற்றிக்கு ஆசையோடு காத்திருந்த கவினுக்கு திடீரென இந்த கூட்டணி அமைந்தது. அதேபோல் திடீரென வந்த வேகத்திலேயே காணாமல் போனது. அதனால் இப்போது என்ன சொல்வது என்று கவலையில் இருந்து வருகிறார்.

மேலும் தனுஷின் 50வது படத்தை அனிருத் இசையமைக்க மறுப்பு தெரிவித்து, கவினின் படத்தில் கமிட் ஆனது ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியது. ஒருவேளை அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே கவின் படத்தை வேண்டாம் என்று அனிருத் சொல்லிவிட்டார் போல தெரிகிறது.

இருப்பினும் கவினிடம் ஆசை காட்டி ஏமாற்றி விட்டார். அதே சமயம் நடிகராக அவதாரம் எடுக்கும் அனிருத், லோகேஷ் கனகராஜ் இணைந்து நடிக்கும் படத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: தனுஷ்- அனிருத் இடையில் அதிகரித்த விரிசல்.. பல கோடியை விட்டு எறிந்த சம்பவம்