வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நடிகையின் மயக்கத்தில் இருக்கும் ஹீரோ.. கொதித்துப் போய் விவாகரத்துக்கு ரெடியாகும் மனைவி

அத்திப்பூத்தாற்போல் ஏதாவது ஒரு ஹிட் திரைப்படங்களை கொடுத்தாலும் அந்த ஹீரோவுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு நடித்து வரும் அவர் சக நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை கேள்விப்பட்ட அவரின் மனைவி பத்ரகாளியாக மாறி இருக்கிறாராம்.

ஏற்கனவே இவர் ஒரு நடிகைக்கு தொடர்ந்து சிபாரிசு செய்தது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இது நடிகரின் மனைவி காதுக்கு சென்ற போது கூட அவர் இலகுவாக அதை சமாளித்து பிரச்சனையை முடித்திருக்கிறார். ஆனால் இதுவே தொடர்கதையாகிப் போனதால் அவரின் மனைவி தற்போது கணவரை பிரியும் முடிவுக்கே வந்துவிட்டாராம்.

Also read: ராக்கி கட்டியவர் கையால் தாலி கட்டிக் கொண்ட நடிகை.. கெட்ட பெயர் வந்தாலும் நினைத்ததை சாதித்த அம்மணி

இத்தனைக்கும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனாலும் தற்போது ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசாமல் ஒதுங்கி இருக்கிறார்களாம். ஒரே வீட்டில் இருந்தால் கூட எதிரும் புதிருமாகவே இருக்கிறதாம் இந்த ஜோடி.

அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் இவர்களுடைய பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனாலும் இரு தரப்பு பெரியவர்களும் இந்த பிரச்சனையை சுமூகமாக முடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கான முயற்சி தான் பலிக்கவில்லை.

நடிகரும் மனைவியை முடிந்தவரை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறாராம். இருந்தாலும் அவரின் கோபம் இன்னும் குறையாததால் எப்போது கோர்ட் படி ஏறுவார் என்ற பதட்டத்துடனே குடும்பத்தினர் இருக்கிறார்களாம். இந்த விவகாரம் தான் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: பக்தி பழம்னு நினைச்சது உங்க தப்பு.. நடிகையை காசாலேயே அடித்து படுக்கைக்கு ஓகே சொல்ல வைத்த நடிகர்

Trending News