வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்ப அந்த கெட்டப் கேப்டன் மில்லருக்கு இல்லையா.? 3ம் முறையாக பாலிவுட் இயக்குனருடன் மிரட்ட வரும் தனுஷ் வீடியோ

Actor Dhanush: தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது எந்த அறிவிப்பும் இன்றி வீடியோ மூலம் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயிருக்கின்றனர்.

அந்த வகையில் தனுஷ் தற்போது பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த ராஞ்சனா, அதரங்கி ரே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி வெளியான ராஞ்சனா தனுசுக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.

Also read: கலவரம் செஞ்சு வெற்றி பெற்ற 5 படங்கள்.. முதல் படத்திலேயே பூகம்பமான தனுஷ்

அதனாலேயே பத்து வருடங்களுக்குப் பிறகு அதே நாளில் இந்த கூட்டணியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் தனுஷ் அடுத்ததாக தேரே இஷ்க் மேன் என்ற ஹிந்தி படத்தில் தான் நடிக்க இருக்கிறார். இது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

ஏனென்றால் தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோவில் தனுஷ் முகத்தில் ரௌத்திரத்துடன் கையில் நெருப்பு பற்றி எரியும் பாட்டிலும், வாயில் சிகரெட்டுமாக ஓடி வருகிறார். ஆவேசமாக வரும் அவர் உன் கையில் இருக்கும் மருதாணி ஒவ்வொரு முறையும் என்னை காயமாக்குகிறது. உன் நெத்தியில் இருக்கும் பொட்டு என் விதியை அழிக்கிறது.

Also read: அனிருத் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. தனுஷ் படத்தில் தொடங்கிய ஸ்ருதியின் நட்பு

என் மூச்சை நிறுத்த உன் நிறத்தை பயன்படுத்துகிறாயா. அப்பாவி குந்தன் வளைந்தான். ஆனால் இம்முறை ஷங்கரை எப்படி தடுப்பீர்கள் என்ற வசனத்துடன் படத்தின் பெயரையும் பட குழு நெருப்புக்கு மத்தியில் அனலாக வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் வீடியோவின் பின்னணி இசையும் வெறித்தனமாக இருக்கிறது.

இதிலிருந்தே இப்படம் ராஞ்சனா 2 ஆக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அப்படத்தில் தான் தனுஷ் குந்தன் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது படுமாஸாக வெளிவந்துள்ள இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே பரபரப்பை கிளப்பிய நிலையில் தனுஷும் இப்படம் ஒரு சாகசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News