1965ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புபோராட்டத்தை பின்புலமாக கொண்டது தான் இந்த கதை. இப்பொழுது இந்த படத்திற்கு விறுவிறுப்பாக ஆடிக்சன் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கார இருவருக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு சிக்கலாகவும் இந்த புறநானூறு படம் பிரச்சனையை உண்டாக்கியது.
சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி படம் ஏற்கனவே நடிப்பதாக இருந்தார். ஆனால் அது ஹீரோயின் ராஸ்மிகா மந்தனா கால்ஷீட் கிடைக்காததால் தள்ளிப் போய் உள்ளது. இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கு ரூட் கிளியராக இருக்கிறது.
புறநானூறு படத்தில் முழுவதுமாக மீசை தாடி இல்லாத காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்க வேண்டுமாம். அதனால் தான் சிவகார்த்திகேயன் இதற்கு முதலில் தடை போட்டார். இப்பொழுது மற்ற படங்கள் தள்ளிப் போவதால் இதற்கு ஓகே சொல்லிவிட்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மாணவர் போராட்டம், மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தான் படத்தின் முக்கிய கதை. இதில் காலேஜில் போராட்டம் பண்ணுவதற்கு 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலேஜ் மாணவனாக நடிப்பதால் சிறு வயது கதாபாத்திரத்திற்கு இந்த படத்தில் சூர்யாவும் பெஸ்ட் சாய்ஸ் தான்.
இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அவரும் தாடி மீசையை எடுத்து விட்டால் சின்னப்பையன் போல் தான் இருப்பார். அதனால் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இப்படி இரு வேறு கதைகளாக புறநானூறு படம் தயாராக உள்ளது.