திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எல்லை மீறிய காதலன்.. டபுள் கேம் ஆடிய சம்யுக்தாவின் வண்டவாளத்தை வெளியே கொண்டு வந்த ஆடியோ

தற்போது சமூக வலைத்தளங்கள் எதை பார்த்தாலும் சின்னத்திரை பிரபலங்களான சம்யுத்தா மற்றும் விஷ்ணுகாந்த் பற்றிய செய்தி தான் காரசாரமாக பேசப்பட்ட வருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் யூடியூப் சேனலில் குறை கூறி வருகிறார்கள்.

இதில் இருவருக்குமே ஆதரவாக அவர்களது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில் விஷ்ணுகாந்த் தனியார் யூடியூப் சேனலில் சம்யுக்தாவின் வண்டவாளம் தெரியும்படி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது சம்யுக்தா தொலைபேசி வாயிலாக அவர் உடன் நடித்த பிரபலம் ஒருவருடன் பேசி உள்ளார்.

Also Read : விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

அப்போது விஷ்ணுகாந்துக்கு முன் ரவி என்பவருடன் சம்யுக்தா பழகி வந்துள்ளார். அந்தச் சமயத்தில் இவரிடம் ரவி எல்லை மீற முற்பட்டு உள்ளார். அதன் பிறகு தான் விஷ்ணுவை காதலித்திருக்கிறார். மேலும் விஷ்ணு சம்யுக்தாவுக்கு முன்னால் தனக்கு ஒரு காதல் இருந்ததாக வெளிப்படையாகவே அவரிடம் சொல்லி உள்ளார்.

ஆனால் சம்யுக்தா ரவியை பற்றி விஷ்ணுவிடம் சொல்லாதது ஒரு குற்றமாக இருந்தாலும், மறுபுறம் விஷ்ணுவுடன் பழகும் போதும் ரவியை தொலைபேசியில் காதல் வசனங்கள் பேசி ஏமாற்றி இருக்கிறார். எதற்காக அவர் அப்படி செய்தார் என்பது தான் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Also Read : என்ன நடிப்பு? நீலி கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. கரிகாலனை பதம் பார்த்த சக்தி

அதாவது ரவி தன்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தான் என்பதை அவன் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக ஆசை வார்த்தைகளால் சம்யுக்தா பேசியிருக்கிறார். ஒரே நேரத்தில் ரவி, விஷ்ணுகாந்த் இருவரையும் வைத்து டபுள் கேம் ஆடி இருக்கிறார் சம்யுக்தா. இந்த உண்மை ஆடியோவின் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

அதுமட்டுமின்றி அப்பாவி விஷ்ணுகாந்த் மீது தேவையில்லாத புகார்களை சம்யுக்தா பரப்பி வருவதாக விஷ்ணு ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதுவரை சம்யுக்தாவுக்கு ஆதரவாக பேசி வந்த சிலரும் இந்த ஆடியோவால் விஷ்ணுகாந்த் பக்கம் சென்று விட்டார்கள். மேலும் இந்த ஆடியோவுக்கு எதிராகவும் பொய்யான தகவல்களை சம்யுக்தா கூறுவார் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : நம்பியவர்களை ஏமாற்றி திராட்டில் விட்ட அஜித்.. இஷ்டம் இல்லாததை செய்யும் ஏகே

Trending News