செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? ஆண்டவர் செய்யப் போகும் பிரியாணி.. போன் போட்டு மெர்சிலாக்கிய கமல்

Kamal: நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளராக சக்க போடு போட்டு வருகிறார் உலகநாயகன் கமலஹாசன். பல வருடங்களுக்கு முன் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கமலுக்கு லோகேஷ் மூலமாக அடித்த ஜாக்பாட் தான் விக்ரம். இப்படத்தின் மாபெரும் வெற்றி மற்றும் எதிர்பார்க்காத வசூல் அனைத்தும் கமலுக்கு மிகப்பெரிய ஒரு பூஸ்ட் ஆக எனர்ஜி கொடுத்தது.

இதனால் ருசி கண்ட பூனை மறுபடியும் அதை ருசிக்காமல் விடாது என்பதற்கு ஏற்ப கை நிறைய லாபத்தை பார்த்ததும் தொடர்ந்து அதே வழியில் போயி இன்னும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் நடிப்பு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் என்று படு பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தை தயாரித்து வருகிறார்.

இதற்கு இடையில் சிம்புவை வைத்து அவருடைய 48வது படத்தை தயாரிப்பதாக சொல்லி இருந்தார். ஆனால் இதுவரை இவர்கள் கூட்டணி என்ன ஆச்சு என்று தெரியாமலேயே கமுக்கமாக இருந்து வருகிறது. இவரை நம்பி சிம்புவும் உடம்பை ஏற்றி ஒர்க்அவுட் பண்ணி வருகிறார். ஆனால் தற்போது சிம்புவை டீலில் விடும் அளவிற்கு கமல் இன்னொரு வழியில் பணத்தை சம்பாதிக்க முயற்சி எடுத்து வருகிறார்.

Also read: கமல் கடைசி வரை கிட்ட சேர்த்துக்காத 5 நடிகர்கள்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

அதாவது சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமால் பாய்ஸ் படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று நல்ல விமர்சனங்களை வாங்கிக் கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தற்போது 100 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் இன்னும் ஓடி கொண்டு வருகிறது. அந்த வகையில் இதற்கெல்லாம் காரணம் கமல் தான் என்று மொத்த வெற்றியும் கமலுக்கு சமர்ப்பித்து இருக்கிறார்கள் படத்தின் இயக்குனர் சிதம்பரம்.

சும்மாவே கமல் ஒரு சான்ஸ் கிடைக்குது என்றால் அதை விட மாட்டார். தற்போது அவர் கையில் வசமாக ஒரு விஷயம் சிக்கியிருக்கிறது என்றால் வச்சா பார்ப்பாரு. அதாவது மஞ்சுமால் பாய்ஸ் வெற்றி அடைந்ததை ஒட்டி தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு போன் பண்ணி டீல் பேசி வருகிறார்கள். இதை தெரிந்ததும் கமல் நான் மட்டும் ஏன் சும்மா இருக்கணும் என்று நேரடியாக கமல் ஆபீஸ்ல இருந்து இயக்குனர் சிதம்பரத்துக்கு போன் பேய்கிறது.

அந்த வகையில் கமல் மற்றும் சிதம்பரம் கூட்டணியில் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம். இதுதான் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது. இப்படி தயாரிப்பாளராக வலை விரித்து வரும் கமல் நடிப்பிலும் ஒரு கை பார்த்து வருகிறார். அந்த வகையில் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் வில்லன் கேரக்டரில் கமல் கமிட் ஆகிருக்கிறார். இதற்காக 150 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார். ஆக மொத்தத்தில் கமலுக்கு சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறது.

Also read: நடிப்பில் கமல் மிரட்டிய 5 கிளைமாக்ஸ் சீன்கள்.. கண் கலங்க வைத்த ‘அன்பே சிவம்’

Trending News