வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

போன வருடம் இதே நேரம் மனைவியுடன் விவாகரத்து.. இப்போது 7 நிமிடம் விடாமல் கைத்தட்டி பாராட்டி வாங்கிய தேசிய விருது

சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சொந்த விஷயம் வெளியில் பேசு பொருளாக மாறிவிடுகிறது. அதுவும் பெரும்பாலும் திரைப்பட பிரபலங்களின் திருமண வாழ்க்கை தான் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிரபல நடிகர் விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் விவாகரத்து பெற்ற அதே நாளில் அந்த நடிகருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் அவரது மனைவி பொய் புகார் தான் கொடுத்திருந்தார் என்பதையும் நிரூபித்து இந்த வழக்கிலிருந்து வெளி வந்தார். இப்போது அவரது கம்பேக்கை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து உள்ளனர்.

Also Read : விஜய் டாட்டா காமித்து கழட்டிவிட்ட 5 இயக்குனர்கள்.. வாரிசுக்கு பின் இருக்கும் அக்கட தேசம்

அதாவது 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் ஜானி டெப் நடிப்பில் உருவான “Jeanne Du Barry” என்ற படம் விழாவில் அரங்கேற்று இருந்தனர். இந்த படத்தில் கிங் லூயிஸ் மன்னராக ஜான் டெப் நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்து விட்டு எழுந்து நின்று ஏழு நிமிடம் கைதட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதைப் பார்த்த ஜானி டெப் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதாவது ஜானி டெப் ஆம்பர் ஹெர்ட் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் ஜான் டெப் தன்னை துன்புறுத்துவதாக ஆம்பர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read : வெங்கட் பிரபு தேர்வு செய்த 2 ஹீரோயின்கள்.. தளபதி 68 வாய்ப்புக்காக லைனில் நிற்கும் மார்க்கெட் போன நடிகை

இந்த வழக்கினால் பல பிரச்சனைகளை ஜான் டெப் சந்தித்து இருந்தார். இதனால் அவருக்கு கிடைத்த பெரிய பட வாய்ப்புகளும் இந்தப் பிரச்சினையால் பறிபோனது. அதன் பின்பு தன் மீது எந்த தப்பும் இல்லை என்பதை நிரூபித்து இந்த வழக்கிலிருந்து ஜான் டெப் வெளியே வந்தார்.

ஆம்பர் இடமிருந்து இவருக்கு விவாகரத்தும் கிடைத்தது. கடந்த ஆண்டு இதே நாளில் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து விடிவு பெற்ற ஜான் டெப்புக்கு உத்வேகம் கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவரை வரவேற்று உள்ளனர். மேலும் இப்போது நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஜான் டெப் அவதாரம் எடுக்க உள்ளார்.

Also Read : தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என நிரூபித்த 5 சகோதரர்கள்.. டில்லிக்கு டஃப் கொடுத்து வரும் ரோலக்ஸ்

Trending News