செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்.. தெரியாமல் தலையை விட்டோமோ என புலம்பும் தனுஷ்

சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இந்த வார ரிலீஸ் படங்கள் அமைந்து இருக்கிறது. வரும் வியாழன்று செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. வெள்ளியன்று மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடித்த பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகிறது.

செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பது என்பது சினிமா ரசிகர்களின் ஒரு மிகப்பெரிய கனவு அதுவும் தனுஷ்-செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி என்பது இளைஞர்களின் கனவு கூட்டணி என்றே சொல்லலாம். ஆனால் இத்தனையும் ஒன்றாக கொண்டு வந்த படக்குழு ரிலீஸ் தேதியில் சொதப்பி விட்டது.

Also Read: கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்காதவரா? மணிரத்தினத்தின் படம் பார்ப்பதற்கு முன் இத தெரிஞ்சுட்டு போங்க

சோழர்களின் வரலாற்றை பறை சாற்றும் பொன்னியின் செல்வன் புத்தகமாக இருக்கும் போதே அதற்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் அதிகம். இப்போது அந்த படத்திற்காக அத்தனை ரசிகர்களும் தவம் இருக்கின்றனர். இந்த படத்துடன் தனுஷ் படம் ரிலீஸ் ஆவது தனுஷிற்கு ஒரு மிகப்பெரிய அடி என்றே சொல்லலாம்.

பொன்னியின் செல்வன் 18ஆம் நூற்றாண்டு படம் என்பதால் பட்ஜெட் அதிகம். எனவே படக்குழு ஆயுத பூஜை தொடர் ஐந்து நாள் விடுமுறையை மனதில் வைத்து 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. நானே வருவேன் படக்குழுவும் அந்த ஐந்து நாளை மனதில் வைத்து தான் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. இந்த படங்களுக்கான தியேட்டர்கள் ஒதுக்குவதிலேயே சிக்கல் வந்துவிட்டது.

Also Read: மணிரத்தினத்திற்கு முன்பே தோற்றுப்போன 2 நடிகர்கள்.. பொன்னியின் செல்வனை கைவிட்டதன் காரணம்

பொன்னியின் செல்வன் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படம் என்பதால் முக்கிய தியேட்டர்கள் அனைத்தும் பொன்னியின் செல்வனுக்கே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நானே வருவேன் திரைப்படத்திற்கு 35 முதல் 40 சதவீதம் தியேட்டர்கள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 4 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பொன்னியின் செல்வனின் முதல் நாள் 20 கோடி வரை எஸ்டிமேட் செய்யப்பட்டு இருக்கிறது. நானே வருவேன் நேற்று முதல் நாள் புக்கிங்கில் 1.25 கோடி வசூல் செய்து இருக்கிறது. எல்லா படத்திற்கும் முதல் நாள் காட்சி ரொம்ப முக்கியமான ஒன்று. அதை வைத்து தான் அடுத்தடுத்து ரசிகர்கள் வருவார்கள். இதை பிளான் பண்ணி தான் 29ஆம் தேதியை நானே வருவேன் படக்குழு லாக் செய்து இருக்கிறார்கள் போல.

Also Read: சிவகார்த்திகேயனை பார்த்து பயந்து ஒதுங்கிய தனுஷ்.. வளர்த்த கிடா மார்பில் முட்டிய சம்பவம்

- Advertisement -spot_img

Trending News