வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி செய்த உருப்படியான விஷயம்.. டிஆர்பி-யில் ஜொலிக்கும் சீரியல்

Vijay Tv: விஜய் டிவியை பொறுத்தவரை எத்தனை நாடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவியுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதற்கு தான் தனி இடம் என்பதற்கு ஏற்ப டிஆர்பி-யில் சிம்ம சொப்பனமாக இருக்கிறது.  முக்கியமாக எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதனால் இந்த நாடகத்துக்கு போட்டியாக தற்போது விஜய் டிவி ஒரு உருப்படியான விஷயம் செய்யப்போகிறது.

விஜய் டிவியின் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்திருக்கும் சீரியல் தான் சிறகடிக்கும் ஆசை. அதாவது முத்து மீனாவின் எதார்த்தமான நடிப்பும், ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியாரின் குதர்க்கமான செயல்களையும் வைத்து வரும் சிறகடிக்கும் ஆசை வருகிற 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக போகிறது.

அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் இருக்கும் விஜயாவின் மாமியார் ஊருக்கு அனைவரும் குடும்பத்துடன் போகிறார்கள். அங்கே போயும் மீனாவை வேலைக்காரி மாதிரி நடத்துவதற்கு விஜயா முயற்சி செய்கிறார். ஆனால் அங்கே அந்த பாட்டி இருப்பதால் அவரிடம் விஜயாவின் ஜம்பம் பலிக்காது.

Also read: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத்தொகை 50 லட்சத்தொடு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த விஜய் டிவி

அந்த வகையில் இது உன்னுடைய வீடு, நீதான் என் மருமகள். அதனால் இங்கே இருக்கும் வரை எல்லாத்துக்கும் நீ தான் சமைக்க வேண்டும் என்று அந்த பாட்டி விஜயாவிடம் சொல்லிவிட்டார். அந்த வகையில் பாட்டி சொல்லை தட்ட முடியாத விஜயா அனைவருக்கும் சமைக்க ஆரம்பித்து விடுகிறார். அப்பொழுது இவருக்கு உதவியாக காய்கறிகளை கட் பண்ணி கொடுக்கிறார் சுருதி.

ஆனால் சுருதிக்கு கையில் காயம் ஏற்படுகிறது. அப்பொழுது அவரால் சாப்பிட முடியாததால் விஜயா ஊட்டி விடுகிறார். இதனை பார்த்த அந்த பாட்டி மற்ற மருமகளுக்கும் ஊட்டி விடு என்று சொன்னதால் விஜயா மீனாவுக்கும் ஊட்டி விடுகிறார். இப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வித்தியாசமான கிராமத்து கதையாகவும், அங்கு விஜயா படும் சோதனைகளையும் கொண்டு இந்த வாரம் சிறகடிக்கும் ஆசை வரப் போகிறது.

அத்துடன் இதற்கு இன்னொரு காரணம் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதால், நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கலை முன்னிட்டு புது படத்தை போடப் போகிறார்கள். அதன் பின் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவு 9 மணியிலிருந்து 10மணி வரை ஒரு மணி நேரம் ஸ்பெசல் எபிசோடாக மக்களை என்டர்டைன்மென்ட் பண்ண வருகிறது.

Also read: 40% வாக்குகளை வாரி சுருட்டிய அர்ச்சனா.. கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி, பிக்பாஸ் டைட்டிலில் வைத்த ட்விஸ்ட்

Trending News