சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

யமுனா செய்த உருப்படியான விஷயம்.. நவீனை ஓட ஓட விரட்டிய விஜய், கைகூட போகும் காவிரியின் காதல்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கலகம் இருந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அது போல் தான் யமுனா சொதப்பிய பல விஷயங்களால் விஜய் மற்றும் காவிரியின் காதல் கைகூட போகிறது. அதாவது ஒப்பந்தத்தின் படி காவிரியை விஜய் கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் நவீன் பற்றிய விஷயங்கள் தெரிந்ததும் அவரிடம் உன்னுடைய காதலை நான் சேர்த்து வைக்கிறேன்.

அந்த வகையில் நானும் காவிரியும் செய்திருப்பது ஒப்பந்த கல்யாணம் தான். அந்த டைம் முடிந்தவுடன் உன்னை காவிரியுடன் சேர்த்து வைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதனால் நவீன், காவிரியை மறக்காமல் என்றைக்குநாலும் நம்முடன் வந்து சேர்ந்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து காதலித்து வந்தார். ஆனால் போகப் போக விஜய், காவிரியை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.

விஜய் மனசுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி

காவிரி இல்லாத ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத என்று சொல்லும் அளவிற்கு காதலித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் யமுனாவிடம் நவீன் சொன்ன விஷயம் காவிரியை ரொம்பவே பாதித்துவிட்டது. அத்துடன் காவேரி, விஜய் மனதிற்குள் நாம் இல்லை என்பதை தவறாக புரிந்து கொண்டார். இதனால் காவேரி இதையோ இழந்தது போல் தவித்து வரும் இந்த சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யை விட்டு பிரிவதற்கு முடிவெடுத்தார்.

ஆனால் தற்போது யமுனா, நவீன் மீது பைத்தியக்காரத்தனமாக வைத்திருக்கும் காதலால் தற்கொலைக்கு முயற்சி செய்து விட்டார். இதனை தெரிந்து கொண்ட நவீன் யமுனாவை காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார். விஷயம் தெரிந்து வந்த காவேரி, யமுனாக்கு புரியும் படி நவீன் என் மனதில் இல்லை. அவர் எந்த நம்பிக்கையில் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று உன்னிடம் சொன்னார் எனக்கு தெரியவில்லை.

ஆனால் எப்பொழுது நான் விஜய்க்கு மனைவியாக தாலி கட்டிக் கொண்டன அப்பொழுதே நவீன் என் மனதில் இருந்து தூக்கி விட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனை கேட்ட நவீன் சுக்கு நூறாக உடைந்து விட்டார். பிறகு விஷயத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த விஜய், நவீனை உதாசீனப்படுத்தும் விதமாக யமுனாவை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. நீங்க போய் ரெஸ்ட் எடுத்து உங்க வேலையை பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் இங்கே இருந்து என்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி நவீனை விரட்டிவிட்டார். பிறகு யமுனாவை சந்தித்து பேசும் பொழுது விஜய்யிடம் நவீனை காதலித்த விஷயத்தை சொல்லி விடுகிறார். ஆனால் நவீன் என் காதலை ஏற்காமல் வேறு ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் சொல்லி விடுகிறார்.

உடனே விஜய், என்ன நவீன் மனதிற்குள் காவேரி இருக்கிறான் என்று சொன்னானா என்று கேட்கும் பொழுது யமுனாக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆமாம் என்று யமுனா சொல்லிய நிலையில் அது மட்டும் இல்ல காவிரி அக்கா மனசுல கொஞ்சம் கூட நவீன் பற்றிய ஞாபகங்கள் இல்லவே இல்லை. முழுமையாக நவினை மறந்து விட்டதாக எனக்கு சத்தியம் செய்து இருக்கிறார் என்று சொல்கிறார்.

இதை கேள்விப்பட்டதும் விஜய் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது போல் பறக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இனி காவேரி எனக்கு மட்டும்தான் சொந்தம் என்ற உணர்வுடன் சந்தோஷப்பட்டு கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் தன்னுடைய காதலை காவேரியிடம் தெரியப்படுத்தும் விதமாக விஜய் எடுக்க போக முடிவு காவிரியின் காதலும் நிறைவேறுவதற்கு வாய்ப்பாக அமையப்போகிறது.

மகாநதி சீரியல் நடந்த சம்பவங்கள்

Trending News