வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

விஜய் டிவியில் ரம்யா பாண்டியன் இடத்தை தட்டிப்பறித்த பிக்பாஸ் பிரபலம்.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்!

விஜய் டிவியில் எப்பொழுதுமே ஒரு வழக்கம் உள்ளது அது என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான வரை அதே சேனலில் ஒளிபரப்பப்படும் மற்ற நிகழ்ச்சிகளில் நடுவராக வழக்கம்.

அந்த வகையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன், பிக் பாஸ் வனிதா ஆகியோர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றனர். ஏன் சொல்லப்போனால் வனிதா குக் வித் கோமாளிக்கு வந்ததே பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் தான்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி பிரபலங்களில் ஒருவரான கேப்ரில்லா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று இருக்கிறாராம்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை விஜய் டிவியே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இந்த செய்தியை உறுதியாகியுள்ளது.

gabrilla-cinemapettai

அதாவது விஜய் டிவியில் முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசனில் யாஷிகா, அபிராமி, ஜாக்குலின் போன்ற செலிபிரிட்டி இளம்பெண்கள் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தான் கேப்ரில்லா நடுவராக பங்கேற்க போகிறாராம். அதேபோல் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸில் இருந்து வந்தவுடன் இடுப்பழகி ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியில் நடுவராகலாம் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News