திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெரிய ஹீரோக்கள் படத்திற்கு வடிவேலு வைக்கும் செக்.. மாட்டி முழிக்கும் தயாரிப்பாளர்கள்

வைகைப்புயல் வடிவேலுக்கு ரெட் கார்ட் தடை நீங்கி இப்போது தான் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது வரை அவரது படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும் இப்போதே வடிவேலு 5,6 படங்களில் நடித்துக் கொண்டு மிக பிஸியாக இருந்து வருகிறார்.

இதனால் அடுத்தடுத்து இவரது படம் வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க காத்திருக்கிறது. இப்போது உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல் லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்தில் நடித்த வருகிறார்.

Also Read :நடிப்பை நிறுத்திய வடிவேலுக்கு நிகரான நடிகர்.. கமல் படத்தோடு எண்டு கார்டு போடும் காமெடியன்

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி வேற லெவலில் இருந்தது. ஆனால் சந்திரமுகி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் காமெடி கௌபாய் போன்ற படங்களில் கதாநாயகனாக வடிவேலு நடித்து வருகிறார்.

இப்போது அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வடிவேலுக்கு வந்த வண்ணம் உள்ளது. ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளனர்.

Also Read :குமுறி அழுத போண்டாமணி.. மலைபோல் நம்பிய வடிவேலு செய்த பெரிய துரோகம் .

இப்போது விஜய் சேதுபதி ஒரு மாசான இடத்தில் உள்ளார். அவருடன் நடிக்கும் போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சரியான நேரம் பார்த்து படகுழுவுக்கு ஒரு செக் வைத்துள்ளார் வடிவேலு. அதாவது இந்த படங்களில் நடிக்க வடிவேலு கோடிகளில் சம்பளம் கேட்கிறாராம்.

அதுவும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றால் 5 கோடி சம்பளம் வேண்டும் என்று வடிவேலு கேட்டுள்ளாராம். இதைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். போறப்போக்க பார்த்தா ஹீரோக்கு இணையான சம்பளத்தை வடிவேலு கேட்டாலும் கேட்பார் என பேச்சு அடிபட்டு வருகிறது.

Also Read :பல கோடி பணத்தை வாரி தின்னு ஏப்பம் விட்ட வடிவேலு.. மோசமாய் இம்சை கொடுக்கும் புலிகேசி

Trending News