திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லோகேஷ்-சை திருப்பி அனுப்பிய மாஸ் நடிகர்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் விக்ரம் திரைப்படம் நாளைய தினம் ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் தெலுங்கு படத்தை இயக்கும் ஆசையில் இருந்ததாகத் தெரிகிறது. இதற்காக கமலின் விக்ரம் படத்தை முடித்த பிறகு பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குவதற்காக அவரிடம் கதை சொல்லி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் .

கதையை கேட்ட பிரபாஸ், இந்தக் கதை வழக்கமான கதையாக உள்ளதாகவும் வேறு ஏதாவது பிரம்மாண்டமான கதை இருந்தால் பேசலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் தனது கதைகள் சிம்பிளாக இருந்தாலும் திரைக்கதையில் பிரம்மாண்டத்தை காட்டுவார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் நல்ல வாய்ப்பை பிரபாஸ் இழந்ததாக கூறலாம். ஏற்கனவே பிரபாஸ், பாகுபலி 2 படத்திற்குப் பிறகு வரிசையாக தோல்வி படத்தையே தந்து கொண்டிருப்பதால் லோகேஷ்சை இந்த நேரத்தில் சரியாக பயன்படுத்தி இருக்கலாம். அதை செய்யாமல் எல்லா படங்களிலும் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கிறார்.

ராஜமௌலி படங்களில் நடித்தால் இப்படியா என்று அவரை வசை பாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இதுவரை எடுத்த படத்தை ஏதாவது ஒன்றை பிரபாஸ் ஒப்பிட்டு பார்த்திருந்தால் கதை சாதாரணமாகத் தான் இருக்கும் ஆனால் பிரம்மாண்டமாக அவர் அந்தப் படத்தை எடுப்பார் என்ற நம்பிக்கை வந்திருக்கும்.

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் 67-வது படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தளபதியின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப்படம் அக்கா சென்டிமென்ட் படமாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக தளபதியை மாஸாக பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு சென்டிமென்ட் படம் எப்படி இருக்கும் என இந்த படம் வெளிவந்தால் தான் தெரியவரும். இருப்பினும் தளபதி ரசிகர்களுக்கு அவருடைய 66-வது படத்தைவிட 67-வது படமான லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தை குறித்தே அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News