வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யின் பின்னால் இருக்கும் பெரிய அரசியல் புள்ளி?. ஆடிப்போன மக்கள் இயக்க நிர்வாகிகள்

Actor Vijay: விஜய் தீவிர அரசியலில் இறங்க தற்பொழுது வேகமாக வேலை செய்து வருகிறார். இதற்காக பல உதவி திட்டங்களையும் செய்து வருகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவருடைய கட்சி பெயர் மற்றும் கட்சியை குறித்த முழு விவரத்தையும் வெளியிடப் போகிறார் என அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.

அதே சமயம் சினிமாவிலும் விஜய்யின் சம்பளம் 200 கோடியாக உயர்ந்து விட்டது. தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த பணம் அரசியலுக்கு பயன்படும் என்று அவர் எண்ணுகிறார். என்னதான் இந்த பணம் அரசியலுக்கு பயன்பட்டாலும் இதைவிட பல மடங்கு பணம் இருந்தால் தான் கட்சி ஆரம்பிக்க முடியும்.

Also Read: பொறுப்போடு அரசியல் செய்யுங்கள்.. கட்டளை போட்ட விஜய்

மேலும் எந்த தேதியில் ஆரம்பிக்கிறார் என பிரபலங்கள் கேட்கின்றனர். சினிமாவில் நடிகராக உயர்ந்த விஜய், அரசியலில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றால் நிச்சயம் அவருக்கு மத்தியில் அல்லது மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த பிரபல அரசியல் கட்சி அல்லது தனிநபர் யாரேனும் விஜய்யின் பின்னால் இருந்து உதவி செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இல்லையென்றால் எம்ஜிஆர் மாதிரி வரவேண்டும் என விஜய் ஆசைப்பட்டால், தன் சொத்தை விற்று தான் கட்சி நடத்த வேண்டும். ஆனால் விஜய் கண்டிப்பாக சொத்தை வைத்து கட்சி நடத்த மாட்டார். அப்படி என்றால் பின்னால் இருப்பது மத்தியில் ஆளும் கட்சியா என சந்தேகம் இருக்கிறது.

Also Read: விஜய் போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 முடிவதற்குள் ஒரு வழி ஆயிடுவாரு போல

இவருக்கு பின்னால் பிஜேபி இருப்பதாக சொல்லப்படுவதால் அதை அறிந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆடிப் போய் உள்ளனர். மற்ற மாநிலங்களில் மத ரீதியாக மக்களிடம் பேசி மாற்றி வைத்திருக்கும் பிஜேபி-ஆல் தமிழகத்தில் மட்டும் அவர்களது பருப்பு வேகல.

இதனால் விஜய்யின் வைத்து தமிழகத்தையும் தங்கள் கைக்குள் கொண்டு வர வேண்டும் என பிஜேபி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான விடையை கூடிய விரைவில் விஜய் தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

Trending News