வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பெரிய நிறுவனங்களே செய்யத் தயங்கும் காரியம்.. அசால்டாக செய்து முடிக்கும் பா ரஞ்சித்

தினேஷுக்கு அட்டகத்தி தினேஷ் என அடையாளம் கொடுத்தது பா ரஞ்சித் தான். அட்டகத்தி படத்தின் மூலம் தான் ரஞ்சித் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பா ரஞ்சித் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கியிருந்தார்.

மெட்ராஸ் படம் யாரும் எதிர்பாராத அளவு சூப்பர் டூப்பர் ஹிட்டானது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்கும் வாய்ப்பும் ரஞ்சித்துக்கு கிடைத்தது. எப்படியாவது இந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் கபாலி, காலா என தொடர் வெற்றிப் படங்களை ரஜினிக்கு கொடுத்தார்.

படங்களை இயக்கி வந்த பா ரஞ்சித் தயாரிப்பில் இறங்கினார். சிறு பட்ஜெட் படங்களை நீளம் புரொடக்ஷன் மூலம் தயாரித்து வந்தார். இந்த நிறுவனம் மூலம் பல இயக்குனர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகபடுத்தி உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்கலாம் என முடிவெடுத்து ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. அடுத்ததாக நடிப்பு அசுரன் விக்ரமை வைத்து பா ரஞ்சித் படம் இயக்கவுள்ளார். கண்டிப்பாக இந்த கூட்டணியில் உருவாகும் படமும் அதிரிபுதிரி ஹிட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பெரிய தயாரிப்பு நிறுவனங்களே வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை தயாரிக்க படாத பாடுபட்டு வருகிறார்கள். ஒரே நேரத்தில் இவரால் மட்டும் எப்படி இவ்வளவு படங்கள் தயாரிக்க முடிகிறது என பலரும் கூறிவந்தனர்.

தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது சிங்கப்பூரில் உள்ள ஒரு கம்பெனி இவரது நீளம் பிரடர்ஷன் நிறுவனத்தில் 150 கோடி இன்வெஸ்ட் பண்ணி உள்ளதாம். இதனால் பா ரஞ்சித் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வருகிறார்.

Trending News