புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வேற லெவலில் உருவாகும் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோ.. பிக் பாஸ் பிரபலத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வெங்கட் பிரபு

விஜய் லியோ படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்போது வெங்கட் பிரபு இப்படத்தின் வேலைகளை தொடங்கி விட்டாராம்.

அதன்படி தளபதி 68 கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோக்களை பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவியில் அதிக டிஆர்பி பெரும் நிகழ்ச்சி பிக் பாஸ் தான்.

Also Read : புளியங்கொம்புல இருந்து முருங்க கொம்புக்கு வந்த தோனி.. விஜய்யை நம்பி மொக்கை வாங்கிய தல

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்கள் வெள்ளி திரையில் கால் பதிக்கிறார்கள். அதன்படி கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி இப்போது தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் பிரமோஷன் வீடியோக்களை இயக்கும் வாய்ப்பு மற்றொரு பிக் பாஸ் பிரபலத்திற்கு கிடைத்துள்ளது.

அதாவது விஜே அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றே வாரங்களில் வெளியானார். பிறகு வையல் கார்டு என்ட்ரியாக நுழைந்தும் சில வாரங்கள் தான் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக் ராஜா படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.

Also Read : மீண்டும் விஜய் டிவியில் தஞ்சமடைந்த டிடி.. பிரம்மாண்டமாக தொடங்க உள்ள சீசன் 3

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அபிஷேக் ராஜா இருவருமே சில காலமாக நண்பர்களாக பழகி வருகிறார்கள். பலமுறை வெங்கட் பிரபுவை அபிஷேக் ராஜா பேட்டி எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி வெங்கட் பிரபுவின் படங்களுக்கு ப்ரோமோஷன் வீடியோக்களை அபிஷேக் ராஜா செய்து கொடுத்துள்ளாராம்.

ஏற்கனவே ஒரு விழா மேடையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படங்களுக்கு நான் வீடியோ செய்து கொடுப்பேன் என அபிஷேக் ராஜா பேசி இருந்தார். அதன்படி விஜய்யின் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோக்களை அபிஷேக் வேற லெவலில் இயக்க இருக்கிறாராம். இந்தச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : பல கோடிகள் சம்பளம் வாங்கியும் இன்கம்டேக்ஸில் சிக்காத 5 நடிகர்கள்.. விஜய்யை பீதியில் உறைய வைத்த புலி

Trending News