செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ராணவ் கேசரி Vs சாச்சமா தேவி.. அரியணை யாருக்கு.? பிக்பாஸ் தர்பார்

Biggboss 8: பிக்பாஸ் வீடு இந்த வாரம் ராஜா ராணி காலத்திற்கு மாறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் சிறுசிறு புயல்கள் அடித்து ஓய்ந்த நிலையில் இந்த புது டாஸ்க் என்ன பூகம்பத்தை கிளப்பும் என்று தெரியவில்லை.

அதன்படி ஆண்கள் அணியில் இருந்து ராணவ் ராஜாவாகவும் பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ராணியாகவும் இருக்கின்றனர். இவர்களின் தலைமையில் வீடு இரு தேசங்களாக பிரிந்துள்ளது.

இவர்களுக்குள் நடக்கும் பல்வேறு போட்டிகளில் வென்று யார் அரியணையை பிடித்து இரு தேசங்களுக்கும் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்பதுதான் டாஸ்க். இதில் மற்ற போட்டியாளர்களுக்கு பல்வேறு வேடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜா காலத்திற்கு மாறிய பிக் பாஸ் வீடு

ஒவ்வொருவருக்கும் சீக்ரெட் டாஸ்க் இருக்கும் எனவும் தெரிகிறது. தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் மூலம் அவர்கள் இந்த டாஸ்கை சுவாரஸ்யப்படுத்த வேண்டும். அதே சமயம் இரு தரப்பும் அரியணைக்காக போராட வேண்டும்.

இப்படி பல விதிமுறைகளுக்கு நடுவில் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களிலும் இது போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை வீடு இரு பிரிவுகளாக இருக்கும் நிலையில் எந்த அளவுக்கு சுவாரசியமாக செல்லும் என பார்ப்போம்.

ஆனால் இதில் வேடிக்கையான ஒன்று சாச்சனா ராணியாக இருப்பதுதான். எதற்கெடுத்தாலும் அழுது கீச்சு குரலில் கத்தும் இவர் எப்படி இதற்கு தேர்வு செய்யப்பட்டார் என ஆடியன்ஸ் இப்போது நம்ப முடியாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News