தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாக மாறியவர் தான் சிம்பு. இவர் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளார்.
மேலும் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், குறுகிய காலத்தில் தயாரான படம் தான் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தைப் பார்க்க சிம்புவின் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் வருகின்ற பொங்கலன்று விஜய் வெறியர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படமும், குறுகிய காலத்தில் தயாரான ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அதுமட்டுமில்லாமல், இன்று தான் தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைக்குமாறு, ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் சிம்பு, ‘ஈஸ்வரன்’ படம் இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, அவசர அவசரமாக வெளியிடுவதற்கு காரணம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையரங்குகளின் மீட்சிதான் என்றும், ஈஸ்வரன் வெளியாகும் அந்த நாளில் விஜய் அண்ணனின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் சிம்பு அந்த அறிக்கையில், ‘விஜய் அவர்கள் நினைத்திருந்தால், ஆன்லைனில் படத்தை வித்து இருக்கலாம். ஆனால் திரையரங்குகளின் நிலை கருதி திரையரங்கில் வெளியிடுவதற்காக பல மாதங்களாக காத்திருந்தனர் படக்குழுவினர்’ என்று கூறியதோடு, தனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்கவேண்டும் என்றும், விஜய் அண்ணனின் ரசிகர்கள் தனது ஈஸ்வரன் படத்தை பார்க்கவேண்டும் என்றும், அதுதான் திரையரங்குகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி என்றும் சிம்பு குறிப்பிட்டிருக்கிறாராம்.
எனவே, தளபதி படத்தை வைத்து சிம்பு இவ்வாறு தனது படத்தை விளம்பரம் செய்திருக்கும் தகவல்கள், தற்போது இணையத்தில் தீப்போல் பரவி வருகின்றன.