வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜோதிகாவின் ரீ என்ட்ரியில் விழுந்த கரும்புள்ளி.. விவகாரமான கதையால் அப்செட் ஆன சூர்யா

Jyothika-Suriya: திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த ஜோதிகா இப்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். ஆனாலும் அவரின் ரீ என்ட்ரியில் இப்போது ஒரு கரும்புள்ளி விழுந்திருக்கிறது. அது இப்போது சூர்யாவையும் அப்செட் ஆக்கி இருக்கிறது.

அதாவது அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த ஜோதிகா கடந்த 13 வருடங்களாக மலையாள படங்களில் நடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் காதல் தி கோர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் அவர் இணைந்துள்ளார்.

வரும் 23ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்திற்கு தான் தற்போது புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் கதை ஒரு விவகாரமான சர்ச்சைக்குரிய பின்னணியை கொண்டதாக இருக்கிறது. அதனாலேயே இப்போது இந்த படத்தை கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் வெளியிட தடை விதித்து இருக்கிறது.

Also read: தளபதி மீது சூர்யா குடும்பத்திற்கு இருக்கும் ஈகோ.. இவ்வளவு பொறாமையா?. 

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான வெற்றியை கொடுக்க இருந்த ஜோதிகாவுக்கு இது பெரும் தடையாக இருக்கிறது. ஆனாலும் மற்ற நாடுகளில் திட்டமிட்டபடி இப்படம் வெளியாக இருக்கிறது. இருப்பினும் படம் குறித்து இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியதை சூர்யா நிச்சயம் எதிர்பார்க்கவில்லையாம்.

படத்தில் முகம் சுளிக்கும் படியான விஷயங்கள் இல்லை என்றாலும் இப்படி ஒரு கருத்து பரவியது வசூலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற சலசலப்பும் இப்போது எழுந்துள்ளது. சமீபத்தில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மம்முட்டி கூட விமர்சனங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைத்தார்.

அதில் அவர் படத்தின் வசூலுக்கும் விமர்சனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் இப்படம் வெளியான பிறகு எந்த மாதிரியான விமர்சனங்களை எதிர்கொள்ளும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே மாதிரி வசூலும் லாபமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also read: சூர்யா, கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ரஜினி, விஜய் எல்லாம் பின்னாடி தான்

Trending News