ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஓசி சாப்பாட்டில் ட்ரீட் வைத்த தம்பி.. இழுத்து மூடுற நேரம் வந்துடுச்சு என புலம்பல்

விஜய் டிவியில் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் கதிரின் ஹோட்டலில் நாளுக்கு நாள் நஷ்டம் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதை எப்படியாவது லாபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என முல்லை மற்றும் கதிர் இருவரும் யோசித்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முயற்சி செய்து வருகிறார்கள். அதற்குள் ஜீவா புது வீடு கட்ட இடம் பார்ப்பதற்கு தனம், மீனா, ஐஸ்வர்யா ஆகியோரை அழைத்துச் செல்கிறார். முதலில் பார்த்த இடம் பிடிக்காததால் இரண்டாவதாக ஒரு இடத்தை பார்க்கிறார்கள்.

Also Read :வாரிசை அழிக்க திட்டம் திட்டிய குடும்பம்.. சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அந்த இடம் பிடித்த போனாலும் விலை அதிகமாக இருக்கிறது என்று யோசனையில் உள்ளனர். இந்நிலையில் தற்போது கண்ணன் புதிதாக வேலைக்கு சென்றுள்ளார். இதனால் தனது நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக கதிரின் பாண்டியன் மெஸ் ஹோட்டலுக்கு அழைத்து வருகிறார்.

அங்கு கதிர் மற்றும் முல்லை இருவரும் கண்ணன் மற்றும் அவரது நண்பர்களை உபசரிக்கிறார்கள். நண்பர்களுடன் வந்து நன்றாக சாப்பிட்டுவிட்டு கண்ணன் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி கதிர் வீட்டுக்கும் சாப்பாடு கட்டி தருகிறேன் என்று கூறுகிறார்.

Also Read :இனியாவை வைத்து டபுள் கேம் ஆடும் கோபி.. பாக்கியாவுக்கு பிடித்த பைத்தியம்

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முல்லையின் அம்மா அவரின் கணவரிடம், இப்படி ஒவ்வொருத்தவங்களா வந்த ஓசி சாப்பாடு சாப்பிட்டு போனா கடையை இழுத்து மூட வேண்டியது தான் என புலம்பித்திருக்கிறார். ஆனால் அதற்கு முல்லையின் அப்பா நம்மள விட அவனுக்கு தான் உரிமை அதிகம் என திட்டுகிறார்.

ஏற்கனவே கடை நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இதில் இப்படியே ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டு கண்ணன் வந்தால் அவ்வளவுதான். மேலும் இன்னும் 20 நாட்களில் முல்லையின் அக்கா மல்லியிடம் 50,000 லாபம் எடுத்துக்காட்டுவதாக விட்ட சவாலில் கதிர் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Also Read :பிபி ஜோடியில் கப்பு ஜெயிச்சாலும் தீராத மன வேதனையில் சுஜா வருணி.. வருத்தத்தில் குடும்பம்

Trending News