Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியல், 6 மாதங்களை தாண்டி நேற்று ஒளிபரப்பாக இருந்தாலும் புதுசாக பார்க்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் விட்டதிலிருந்து தொடர்ச்சியாக கதைகள் நகர்ந்து வருவதால் சுவாரசியமாக இருக்கிறது. அதாவது குணசேகரன் ஜெயிலுக்கு போனதால் வீட்டில் இருக்கும் விசாலாட்சி, மகன் நினைப்பில் பரிதவித்து இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கதிர் மற்றும் ஞானம் பொண்டாட்டிகள் பேச்சை கேட்டு திருந்தினாலும் ரத்த உறவாக இருக்கும் அண்ணனின் நிலைமையை கண்டு குணசேகரன் மீது பாசத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஏற்ற மாதிரி விசாலாட்சியும், குணசேகரன் குணசேகரன் என்று புலம்பி தவிப்பதால் என்ன பண்ணுவது எப்படி அண்ணனை வெளியே கூட்டிட்டு வருவது என்று தெரியாமல் ஞானம் மற்றும் கதிர் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கிடையில் கரிகாலன் அந்த வீட்டில் இன்னும் எடுபிடி வேலையை பார்த்துக் கொண்டு,குணசேகரனுக்கும் அவருடைய தம்பிக்கும் பக்கபலமாக இருந்து வருகிறார். அம்மாவின் நிலைமையை தெரிந்து கொண்ட ஆதிரை மகளின் பாசத்தை காட்டுவதற்காக அம்மாவிடம் பேசுவதற்கு குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஆதிரையை பார்த்ததும் ஞானம் மற்றும் கதிர் கோபத்தால் பார்க்க விடாமல் தடுக்கிறார்.
பிறகு அங்கு இருப்பவர்கள் உங்க அண்ணன் ஜெயிலுக்கு போவதற்கு முக்கிய காரணமே உங்களுடைய பொண்டாட்டிகள் தான். ஆனால் அவர்களையே நீங்கள் மன்னித்து உங்களுடன் உங்க வீட்டில் இருக்க வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் தங்கை மீது இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லி ஆதரையை உள்ளே விட்டு விசாலாட்சி பார்க்க சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து அம்மாவின் நிலைமையை பொண்டாட்டிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஞானம் மற்றும் கதிர், ரேணுகா மற்றும் நந்தினிக்கு போன் பண்ணி பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அவர்கள் நினைத்த கனவை நோக்கி பயணிக்கும் விதமாக முன்னேற ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஈஸ்வரி, தனக்குத் தெரிந்த விஷயத்தை கஷ்டப்படும் குழந்தைகளுக்கு புரிய வைத்து அவர்களை பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.
இதில் ஏகப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் வந்தாலும் அதை சமாளித்து குழந்தைகளுக்கு கல்வியை நன்றாக வழங்கி அவர்களுடைய எதிர்காலத்தை வெளிச்சமாக்கி காட்டுவேன் என்று சபதத்துடன் செயல்பட்டு வருகிறார். அதே மாதிரி பரதத்தின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய குழந்தைகளுக்கு நான் பக்க பலமாக இருந்து அவர்களை வழிநடத்துவேன் என்று ரேணுகாவும் பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இவர்களை மாதிரி நந்தினியும், அவருக்கு தெரிந்த சமையல் தொழிலை வைத்துக்கொண்டு அதன் மூலம் படிப்படியாக முன்னேறி காட்டுவேன் என்று சிறு தொழில் மூலம் போராடி வருகிறார். இப்படி இவர்கள் மூன்று பேரும் அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு முதற்படிக்கட்டுகளை எடுத்து வைத்து விட்டார்கள்.
அத்துடன் ஜனனி, கணவர்களால் கொடுமைகளை அனுபவித்து, திறமைகளை மறந்து வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி அவர்களுடைய லட்சியத்தை அடைவதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஜனனிக்கு முழு ஆதரவையும் கொடுத்து சக்தி மற்றும் அப்பத்தா இருக்கிறார்கள். இப்படி குணசேகரன் வீட்டிற்கு அடிமைகளாக வந்த நான்கு மருமகள்களும் தற்போது சொந்த காலில் நின்னு ஜெயிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் இத்தனை வருஷமாக பெண்களை கிள்ளிக்கீரையாக நினைத்து ஆட்டிப் படைக்க நினைத்த குணசேகரன் தற்போது ஜெயிலில் களி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு வச்ச ஆப்பு சாதாரண ஆப்பு இல்லை என்பதற்கு ஏற்ப ஜனனி மூலம் மற்ற பெண்களும் சேர்ந்து குணசேகரனுக்கு ஆப்பு வச்சதால் தற்போது வெளியே வர முடியாத அளவிற்கு குணசேகரன் நிலைமை மோசமாக இருக்கிறது.
குணசேகரனை வெளியே கூட்டு வர முடியாமல், ஜாமினும் கிடைக்காததால் ஞானம் மற்றும் கதிர் கோர்ட்டு கேஸ் என்று அலைந்து போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன் வெளியே வந்து விட்டால் அந்த நான்கு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று சாருபாலா ஒரு செக் வைத்ததால் குணசேகரன் இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பில்லை.