செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

எங்க கிட்டயும் இருக்கு பலகோடி.. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கே சவால் விடும் பிரதர்ஸ்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை ஓரம் கட்டும் அளவிற்கு தமிழில் புது வரவை வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. கோடிகள் இருந்தால் போதும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் படத்தை எடுக்கலாம் என்பதை அப்பட்டமாக சொல்லும் அளவிற்கு எடுத்திருக்கிறார்கள் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி அருள் நடித்திருக்கும் ‘தி லெஜெண்ட் ‘ திரைப்படம்.

இந்தப்படத்தில் பிரம்மாண்ட காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி கம்பெனி. ட்ரெய்லரில் வெளிவந்த ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டம். சரவணன் அண்ணாச்சி ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள்.

மொத்த படக்குழுவும் வேற லெவலில் இந்த படத்தில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக இது மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இப்பொழுது அவரை மிஞ்சும் அளவிற்கு சரவணன் அண்ணாச்சி படம் இருக்கிறது என்பதுதான் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஜேடி அண்ட் ஜெர்ரி ஏற்கனவே அஜித், விக்ரம் நடித்த ‘உல்லாசம்’, ஷெரின் நடித்த ‘விசில்’, விக்ரமாதித்யா போன்ற திரைப்படங்களை இயக்கினாலும் தற்போது அருள் அண்ணாச்சியை வைத்து இயக்கிய இந்தப் படத்தை போல் மற்ற படங்களில் பிரம்மாண்டம் காட்டவில்லை.

ஏனென்றால் இந்தப் படத்தின் ஹீரோவான அருள் அண்ணாச்சி தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் படத்தின் ஃபேன்டஸி கதையை கொண்டு உருவாகியிருக்கும் தி லெஜன்ட் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிகை கீதிகா திவாரி நடிக்கவுள்ளார். எனவே ஷங்கர் படத்தை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டத்தை காட்டிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்றுள்ளது.

Trending News