வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முத்துவிடம் ஒட்டிக்கொள்ள போகும் பிரவுன் மணி.. இனிதான் ரோகினியின் முகத்திரை கிழியப்போகுது

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணியின் மாமாவாக பிரவுன் மணி நடிக்க வந்திருக்கிறார். ஆனால் இவர் கசாப்பு கடையில் வேலை பார்க்கும் கரிக்காரர் என்பதை அவ்வப்போது பேச்சிலே கண்டுபிடிக்கலாம். அந்த அளவிற்கு தான் இடையில் இடையில் இவருடைய வார்த்தைகள் எல்லாம் வெளிப்படுகிறது.

ஆனால் இது தெரியாமல் விஜயா மலேசியாவில் இருந்து பணக்கார மாமா வந்திருக்கிறார் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வீட்டையே ரணகளப்படுத்தி விட்டார். அதே மாதிரி ரோகிணியும் பொய்யும் பித்தலாட்டம் தான் பண்ணுகிறோம் என்பதை மறந்து முக்கால்வாசி முத்துவையும் மீனாவையும் மட்டம் தட்டி பேசி வருகிறார்.

இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ என்பதற்கேற்ப ரோகினி மாமாவாக நடிக்க வந்திருக்கும் பிரவுன் மணி கூடிய விரைவில் முத்துவிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறார். அதாவது இவர்கள் இருவருடைய கேரக்டர் கொஞ்சம் ஒத்துப் போகப் போகிறது. அதே மாதிரி முத்துவின் நண்பர் அடிக்கடி கள்ளு குடிப்பதற்கு கூப்பிட்டு இருக்கிறார்.

Also read: கதிர் தர்ஷினியின் நிலைமைக்கு காரணமான கருப்பு ஆடு.. குணசேகரன் கூட உறவாடி கெடுக்க போகும் மெய்யப்பன்

அப்பொழுது ரோகினியின் மாமாவும் முத்துவிடம் போய் தண்ணி அடிக்கப் போகிறார். அந்த நேரத்தில் சில விஷயங்களை உளறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் முத்து இதை கூடிய விரைவில் கண்டுபிடித்தால் ரோகினி முகத்திரை சீக்கிரத்திலேயே கிழிந்து விடும். அதன் பிறகு தான் விஜய்யின் உண்மையான சுயரூபம் என்னவென்று ரோகிணிக்கு தெரிய வரப்போகிறது.

இதற்கிடையில் மீனா, அடிமை வாழ்க்கையை வாழ்வதே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு மாமியாரை எதிர்த்து பேசினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அத்துடன் ரோகிணி மற்றும் சுருதிக்கும் சேர்த்து பணிவிடை பார்ப்பதை மீனா நிறுத்திவிட்டு வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்தி கெத்தாக வாழ்ந்து வந்தால் நன்றாக இருக்கும்.

Also read: எதிர் நீச்சல் குணசேகரன் கொடுக்கும் திருட்டு பட்டம்.. ராஜமவுலி, தனுஷ் என் கதையை திருடிட்டாங்க!

Trending News