சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிக்குக்கோழி போல் மாறிய பப்ளி நடிகை.. பட வாய்ப்புக்காக எல்லை மீறி போடும் ஆட்டம்

அந்த ரியாலிட்டி ஷோ பல பிரபலங்களுக்கு சினிமாவில் நுழையும் என்ட்ரி டிக்கெட் ஆக இருக்கிறது. அப்படித்தான் பக்கத்து நாட்டில் இருந்து வந்து இந்த ஷோவில் கலந்து கொண்ட அந்த பிரபலத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

ஆனால் போகப் போக அந்த பெயரை கெடுத்துக் கொண்ட நடிகை ஹீரோயின் ஆகவும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவருடைய போதாத காலம் அவர் நடித்த படம் எல்லாம் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓடியது. இதனால் வாய்ப்புகளைப் பிடிக்க நடிகை சோஷியல் மீடியாவின் துணையை நாடினார்.

அப்போது உடம்பை குறைத்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ சொல்லியதை வைத்து சீக்கு வந்த கோழி போல் மாறினார் நடிகை. பப்லியாக இருந்த நடிகை இப்படி எலும்பும் தோலுமாக மாறியது அவருக்கே ஆப்பாக முடிந்தது.

Also read: பெத்தவங்கள விட காதல் தான் முக்கியம்.. இளம் நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் டிவி நடிகை

அவருடைய இந்த தோற்றமே அவருக்கு வர இருந்த வாய்ப்பையும் கெடுத்து விட்டது. இதனால் நொந்து போன நடிகை அரைகுறை உடையுடன் எல்லை மீறி போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் அவருக்கு நெகட்டிவ் கமெண்ட் தான் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நடிகை தன் அப்பாவுக்காக சில காலம் ரொம்பவே அடக்கி வாசித்தார். தற்போது அவரும் இல்லை என்பதால் தான் இப்படி எல்லை மீறி ஆட்டம் போடுகிறார் என சிலர் வெளிப்படையாகவே கழுவி ஊற்றி வருகின்றனர்.

Also read: எக்ஸ் புருஷன் மீது பழியை தூக்கி போட்ட மனைவி.. நொண்டிக்குதிரைக்கு சறுக்குனது தான் சாக்கு

Trending News