வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கியூட் நடிகையை படிய வைக்க பேரம் பேசிய தொழிலதிபர்.. 20 கோடி கொடுத்தும் மசியாத ஹீரோயின்

நடிக்க வந்த வேகத்திலேயே கியூட் நடிகை ஒருவருக்கு உச்ச நடிகருடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதிலிருந்தே அம்மணி படுபிஸியாக நடிக்க தொடங்கினார். ஆனால் வயசு கோளாறில் காதலில் விழுந்த நடிகைக்கு பலத்த அடியும் விழுந்தது.

சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக மீண்டும் நடிப்புக்கு திரும்பிய அவர் புது பாணியை கையில் எடுத்தார். அதிலிருந்து நடிகை தொட்டதெல்லாம் துலங்கியது. ஹீரோவுக்கு நிகராக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடிகையாகவே அவர் மாறி போனார்.

இந்த இடைப்பட்ட கேப்பில் நடிகைக்கு மீண்டும் ஒரு காதல் துளிர்விட்டது. ஆனால் இந்த முறை சுதாரிப்பாக இருந்த நடிகை காதலரையே கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அதை அடுத்து அம்மணி இப்போது குடும்பம் ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

Also read: 50 வயதிலும் ஃபேவரிட் நடிகைக்கு தொடரும் அந்தரங்க டார்ச்சர்.. அட்ஜஸ்ட்மெண்ட்டால் குவியும் பட வாய்ப்பு

ஆனால் இவர் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு இவர் மீது ஒரு கண் இருந்திருக்கிறது. எப்படியாவது தன்னுடைய விளம்பர படங்களில் நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று அவர் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் நடிகையோ பிடி கொடுக்காமலேயே இருந்திருக்கிறார்.

அதையடுத்து தொழிலதிபர் சினிமாவில் நடிக்க வந்தபோது 20 கோடி வரை சம்பளம் தருவதாக பேரம் பேசி இருக்கிறார். ஆனாலும் மசியாத நடிகை தொழிலதிபருக்கு சரியான பல்பு கொடுத்து விட்டாராம். அந்தக் கடுப்பில் தான் அவர் அதே சம்பளத்தை கொடுத்து வேறு ஒரு ஹீரோயினை இறக்குமதி செய்து இருக்கிறார்.

Also read: நீ ஒரு வண்டு என அனிருத்தை திட்டிய நடிகை.. ஆசையாய் அழைத்தவருக்கு அடி விழாத குறை தான்

Trending News