திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அல்ப விஷயத்துக்காக எதிரியாய் மாறிய வடிவேலு.. கடைசி வரை பெரிய மனுஷன் என நிரூபித்த கேப்டன்

Vijayakanth-Vadivelu: கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு நீங்கியதை அடுத்து தற்போது ஒட்டு மொத்த மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் தன்னை சினிமாவில் ஆளாக்கிவிட்ட கேப்டனை இறுதியாக பார்க்கக்கூட வடிவேலு வராதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்படி என்ன கோபம்? உங்களை கை தூக்கி விட்ட வரை இறுதியாக பார்க்க கூட வர முடியவில்லையா? என ரசிகர்கள் கடும் கோபத்துடன் வடிவேலுவுக்கு எதிராக பேசி வருகின்றனர். உண்மையில் வடிவேலு தன் முதுகில் குத்திய போதும் கூட கேப்டன் தான் பெரிய மனுஷன் என்பதை கடைசி வரை நிரூபித்திருக்கிறார்.

அதாவது வடிவேலு கேப்டன் மீது கோபப்படுவதற்கு பின்னால் ஒரு அல்ப விஷயம் தான் இருக்கிறது. அது என்னவென்றால் விஜயகாந்தின் வக்கீல் இறந்து விட்டார். அவருடைய வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரில் தான் இருந்திருக்கிறது. அப்போது சாவுக்கு வந்தவர்கள் தங்கள் வாகனங்களை வடிவேலுவின் வீட்டின் முன் நிறுத்தி இருக்கின்றனர்.

Also read: செல்லப் பிள்ளையாய் இருந்த விஜயகாந்த் கலைஞரை எதிர்த்த காரணம்.. சிஸ்டம் சரியில்ல என ஒதுங்கிய ரஜினி

இதனால் கடுப்பான வைகைப்புயல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதுதான் பிரச்சனையின் மூல காரணம். அதை தொடர்ந்து அவர் விஜயகாந்துக்கு எதிராக பேசியதையும், தேர்தலில் நின்று அவரை தோற்கடிப்பேன் என சவால் விட்டதையும் நாம் பார்த்தோம்.

அதன் பிறகு வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்தை தாக்கி பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதால் வடிவேலுவின் நிலை அந்தோ பரிதாபமானது. மொத்த சினிமா வாய்ப்பும் முடங்கி வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு அவர் ஆளானார்.

அப்போது கூட விஜயகாந்த் வடிவேலுவின் நண்பர்களிடம் அவர் ஒரு நல்ல நடிகர் ஏன் நடிக்கவில்லை என்று கேட்பாராம். அதேபோல் அவரை யார் திட்டினாலும் வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று கூறுவாராம். இப்படி 250 ரூபாய்க்கு நடிக்க வந்தவருக்கு ஐந்து டிரஸ் எடுத்துக் கொடுத்து வளர்த்து விட்ட கேப்டனை மறந்த வடிவேலுவின் செயல் நிச்சயம் மன்னிக்க முடியாதது.

Also read: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் 5 ஆசைகள்.. பணத்தாசை இல்லாதவரை பதவிக்காக வீழ்த்திய நரிக்கூட்டம்

Trending News