ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஊசி, மாத்திரைகளால் மரண வேதனையை அனுபவித்த கேப்டன்.. இறந்த பின் வெளிவரும் சோகம்!

Captain Vijayakanth experienced the agony: கடந்த 26 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இப்போது தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஆனால் கேப்டன் கடந்த சில வருடங்களாகவே உயிர் போகும் அளவுக்கு வேதனையை அனுபவித்து இருக்கிறார் என்ற விஷயம், அவருடைய இறப்புக்கு பின் ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

உடல்நலம் சரியில்லாத விஜய்காந்த் ஊசி, மருந்து, மாத்திரை என்று சில வருடங்களாகவே படாத படுபட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு சிங்கம் போல் சீறிக் கொண்டிருக்கும் பழைய விஜயகாந்த்தை பார்க்க முடியவில்லை. நிற்பது, நடப்பது, பேசுவதில் கூட தடுமாற்றம் ஏற்பட்டது. அதிலும் சில மாதங்களாகவே தொண்டர்களுக்கு வெறும் கை அசைவை மட்டுமே காட்டுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் இடி போல் முழக்கமிட்ட விஜயகாந்த், இப்போது பேச முடியாமல் வீல் ஷேரில் முடங்கி கிடப்பதை பார்த்து ரசிகர்கள் கலங்கி போனார்கள். நாளுக்கு நாள் இவருடைய உடல் நிலையும் மோசமானது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவரது காலில் இருந்த மூன்று விரல்கள் அகற்றப்பட்டது.

Also Read: அல்ப விஷயத்துக்காக எதிரியாய் மாறிய வடிவேலு.. கடைசி வரை பெரிய மனுஷன் என நிரூபித்த கேப்டன்

மரண வேதனையை அனுபவித்த கேப்டன்

இவருக்கு சுகர் இருப்பதால் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், விரலை அகற்றியதாகவும் அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து ஊசி, மருந்து, மாத்திரையால் தான் காலத்தை தள்ளினார். கடைசியில் சுத்தமாகவே மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட கேப்டன், கடைசியாக தன்னுடைய இறுதி மூச்சை விட்டார்.

இவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களும் ரசிகர்களும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் போலவே ‘நல்லவரை இழந்து விட்டோமே!’ என்று கதறி அழுகின்றனர். விஜயகாந்தின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவருடைய உடல்நிலை மட்டும் ஒத்துழைத்திருந்தால் அரசியலிலும் சினிமாவிலும் இன்னும் நிறைவே சாதித்திருப்பார்.

Also Read: உண்மை தெரியாமல் ஆக்ரோச பட்ட கேப்டன் விஸ்வாசிகள்.. ஒரு வருடமாக விஜய்யை நெருங்க விடாத காரணம்!

Trending News