வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நண்பன் பெயரில் சொத்தை குவித்த கேப்டன்.. 40 வருடமாக புதைந்து கிடந்த விஜயகாந்தின் நட்பு

Vijayakanth Friendship: ஒருவர் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாது என்று சொல்வார்கள். அது எந்த அளவுக்கு உண்மையானது என்று விஜயகாந்த் மறைவு நமக்கு ரொம்பவே உணர்த்திவிட்டது. தற்போது எங்கு திரும்பினாலும் விஜயகாந்தின் புராணம், மக்களுக்காக ஒவ்வொரு முறையும் குரல் கொடுத்து பேசிய கருத்துக்கள் அனைத்தும் வீடியோக்கள் மூலம் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தற்போது வரை எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் இவருக்கு எதிராக யாருமே ஒரு கருத்தை கூட முன் வைக்காத அளவிற்கு சொக்கத்தங்கமாக இருந்து வாழ்ந்து காட்டியிருக்கிறார். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதற்கு மத்தியில் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு கோட்பாடுடன் வாழ்ந்திருக்கிறார். அதற்கான மகத்துவம் தற்போது தான் புரிகிறது.

இப்படி இவரைப் பற்றி நல்ல விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கிடையில் விஜயகாந் ஒரு நல்ல நடிகராகவும் சிறந்த தலைவராகவும் இருப்பதற்கு இவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து கை கொடுத்தவர் இவருடைய நண்பர் ராவுத்தர். இவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள் என்று அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் இவர்கள் இருவருடன் சேர்ந்து இன்னொரு நண்பரும் இருந்திருக்கிறார்.

Also read: விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்

அதுவும் 40 வருட காலமாக நண்பராக மூன்று பேரும் பயணத்திருக்கிறார்கள். அவர் யார் என்றால் தினமணி ரிப்போர்ட்டர் சிங்காரவேலு. இவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர். முக்கியமாக விஜயகாந்தின் வளர்ச்சிக்கு காரணமே இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு நட்பு ரீதியாக பக்க பலமாக இருந்திருக்கிறார். அதனால் விஜயகாந்த் இவரை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வந்திருக்கிறார்.

அதுவும் எந்த அளவிற்கு என்றால் விஜயகாந்துக்கு தற்போது காவிரி தெருவில் இருக்கும் சொத்துக்கள் ஆரம்பத்தில் இவருடைய நண்பர் சிங்காரவேலு பெயரில் தான் இருந்திருக்கிறதாம். அந்த அளவிற்கு நண்பர் மேல் இருந்த நம்பிக்கையில் சொத்துக்கள் அனைத்தையும் சிங்காரவேலு பெயரில் வாங்கி குவித்துள்ளார். அப்படி அந்த நேரத்தில் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் மற்றும் சிங்காரவேலு மூவரும் நட்பிற்கு இலக்கணமாக உயிராக இருந்திருக்கிறார்கள்.

Also read: கேப்டன் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகிகள்.. இறந்த பிறகு நீலி கண்ணீர் வடித்த விஜய்

Trending News