வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காவாலா பாடலில் தமன்னா மட்டும்தான்.. என்னது தலைவர் இல்லையா? சீக்ரெட்டை உடைத்த படக்குழு

 Kaavalan Songs Jailer: சமீபத்தில் லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் வெளியாகி இணையத்தை ரணகளம் செய்து கொண்டிருக்கிறது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் தூக்கலான உடையில் சூப்பர் ஸ்டாருடன் கவர்ச்சியாட்டம் போட்டு இருக்கிறார்.

ஆனால் இந்தப் பாடலில் தமன்னாவுடன் கொஞ்சம் கூட ஒட்டாமல் சூப்பர் ஸ்டார் தனக்கே உரித்தான ஸ்டைலில் ஒரு சில ஸ்டெப்புகளை போட்டு ரசிகர்களை குதூகல படுத்தினார். ஆனால் இந்த பாடலில் ரஜினியே இல்லை என்று பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

Also Read: பலான காட்சியால் பறிபோகும் வாய்ப்பு.. மார்க்கெட் போயிடுமோ என்ற பயத்தில் விளக்கம் கொடுத்த தமன்னா

இதை தமன்னா பாடல் ஆகவே வைத்திருக்கலாம், எதற்காக தேவை இல்லாமல் ரஜினியை இதில் உள்ளே சொருகி விட்டார்கள் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர். ஏனென்றால் அந்த அளவிற்கு கிளாமராக எடுக்கப்பட்ட இந்த பாடலில் சம்பந்தமே இல்லாமல் ரஜினியை ஒட்ட வைத்திருக்கின்றனர்.

முதலில் நெல்சன் திலிப் குமார் இந்த பாடலை பற்றி அருண்ராஜா காமராஜிடம் எழுத சொன்னபோது, இதில் தமன்னா மட்டுமே இருப்பதாக அவரிடம் சொல்லி இருக்கிறார். ரஜினி இந்த பாடலில் இருப்பதையே தன்னிடம் கூறவில்லை என சமீபத்திய பேட்டியில் அருண்ராஜா காமராஜ் சீக்ரட்டை உடைத்திருக்கிறார்.

Also Read: எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா.. தமன்னாவால் படாத பாடுபடும் நெல்சன்

இந்த பாடல் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு ஆச்சரியமாக இருந்ததோ, அதே அளவிற்கு தான் அந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் ஷாக் ஆகி இருக்கிறார். ஏனென்றால் ரஜினிகாந்த் எப்படி இந்த பாடலில் வந்தார் என்று அவருக்கே தெரியவில்லை.

ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலிப் குமார் எதற்காக இப்படி ரசிகர்களை குழப்புகிறார் என்றும் அவர் ஆதங்கப்பட்டார். இந்த படத்தில் ரஜினிக்கு என்றே மாஸ் லுக்கில் இருக்கும் பாடல் இருக்கையில் எதற்காக இந்த பாடலை வெளியிட்டார்கள் என்று அருண்ராஜா காமராஜ் கேள்வி எழுப்புகிறார்.

Also Read: தளபதியின் சூப்பர் ஸ்டார் கனவுக்கு செக் வைத்த ரஜினி.. ஜூன் மாத இறுதியில் தான் சம்பவமே இருக்கு

Trending News