வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிக்க கூட தெம்பில்லாத ரோபோ சங்கர்.. உண்மையை உடைத்த பிரபலம்

விஜய் டிவியில் காமெடி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் ரோபோ சங்கர். தன்னுடைய தனித்துவமான திறமையாலும், மற்ற நடிகர்கள் போல் மிமிக்ரி செய்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் ரோபோ சங்கருக்கு கிடைத்தது.

டாப் நடிகர்களின் படத்தில் தற்போது ரோபோ சங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது புகைப்படம் வெளியாகி இருந்தது. இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அப்படி ரோபோ சங்கருக்கு என்ன தான் ஆச்சி என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

Also Read : ரோபோ சங்கரை விட மோசமாக மாறிய வெங்கட் பிரபு.. எலும்பும் தோலுமான புகைப்படம்

அப்போது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா தனது கணவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக கூறினார். மேலும் இன்னும் சில மாதங்கள் கழித்து மிகவும் மோசமான உடல் நிலை உடன் ரோபோ சங்கர் காணப்பட்டார். இப்போது ரோபோ சங்கரின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது ரோபோ சங்கரை பொருத்தவரையில் அவர் நல்ல மனிதர். ஆனால் வெள்ளிதிரைக்கு வந்த பிறகு சில நண்பர்களுடன் சேர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

Also Read : 6 மாதமாக ரோபோ சங்கருக்கு இருந்த பிரச்சனை.. சீக்ரெட்டாக நடந்த ட்ரீட்மெண்ட்

இப்போது அதற்கான தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம். மேலும் பயில்வான் சொன்ன மற்றொரு விஷயம் தான் ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதாவது ரோபோ சங்கரால் நிற்க கூட முடியவில்லை. அவரது மனைவி மற்றும் மகள் தான் கைதாங்கலாக அழைத்துச் செல்கிறார்களாம்.

ரோபோ சங்கரை நேரில் சென்று பார்த்தவர்கள் சொன்னதாக பயில்வான் இருக்கிறார். இதுவரை படத்திற்காக தான் ரோபோ ஷங்கர் இவ்வாறு மெலிந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பயில்வான் சொன்ன விஷயம் பெரிய இடியாக அமைந்துள்ளது. அதுமட்டும்இன்றி இவர் சொல்வது உண்மையா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

Also Read : புத்தாண்டில் ஷாக் கொடுத்த ரோபோ சங்கர்.. விஜயகாந்த் போல மெலிந்து போன புகைப்படம்

Trending News