சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தற்கொலைக்கு தூண்டும் மனோபாலா.. மறைமுகமாக திட்டித்தீர்த்த பிரபலம்

தமிழ் சினிமாவில் 10 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கி இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா. இவர் தற்போது கொஞ்சம் கூட சமுதாய பொறுப்பில்லாமல் பலருடைய உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான விளம்பரத்தில் நடித்து இளைஞர்களிடம் ஆசையைத் தூண்டி கொண்டிருக்கிறார்.

அதிலும் இந்த விளம்பரத்தில், ‘ரூ.25 பைக், ரூ.30 ஐபோன், ரூ.50 கார், அதன்பிறகு லட்சக்கணக்கில் பணம் இதெல்லாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கிடைக்கும்’ என்றெல்லாம் ஆசை காட்டும் விளம்பரப்படத்தில் மனோபாலா தேனொழுக பேசும்  தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.

இதற்கு திரை பிரபலங்களும் பொதுமக்களும் வரிசையாக எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர் மட்டுமல்ல காளிதாஸ் ஜெயராம், பிரேம்ஜி போன்றோரும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் மூன்று தலைமுறைக்கு சொத்து இருக்கும் நிலையில், பல இளைஞர்களை கடன்வாங்கி விளையாட வைக்க தூண்டும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து தான் சம்பாதிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது எனவும் சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு எழுகிறது.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பேசியபோது, ‘பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் எப்போதுமே நடிக்க மாட்டேன். இதற்காக யார் என்னை அணுகினாலும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன்’ என அழுத்தமாகக் கூறி, இந்த விளம்பரத்தில் நடித்தவர்களை மறைமுகமாக திட்டித் தீர்த்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் அடல்ட் படமாக இருந்தாலும், அவருக்குக் கூட இப்படி ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. ஆனால் வயதில் மூத்த திரை அனுபவம் நிறைந்த மனோபாலா கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த விளம்பரத்தில் நடித்திருப்பது அவருடைய தரத்தை அவரே தாழ்த்தி கொண்டார்.

சமீபத்தில் கூட சென்னையில் ரம்மி விளையாடி அதில் பணம் இறந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டனர் இப்படி பலரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாட வைக்கும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.

Trending News