ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

இப்பதான் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கேன் பிக் பாஸ்.. அது உங்களுக்கு பொறுக்கலையா!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ்  நிகழ்ச்சியானது கடந்த ஐந்து சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது புது முயற்சியாக 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரின் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே வரும் 30ஆம் தேதியன்று துவங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் இடம்பெற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகின்றனர் என்பதை குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இதில் பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, சினேகன் இருவரும் உறுதியான நிலையில் ஓவியா ரசிகர்களின் பிடித்தமான போட்டியாளர் என்பதால் அவரும் இதில் கலந்து கொள்ள தயாராகி விட்டார். அத்துடன் பிக் பாஸ் சீசன்1ன் டைட்டில் வின்னர் ஆரவ் பிக்பாஸ் அல்டிமேட் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

‘மறுபடியும் பிக் பாஸா! வேண்டவே வேண்டாம். அதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன். எனக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு வாழ்க்கை நன்றாக போய்க்கிட்டு இருக்கு. என்னை விட்டு விடுங்கள்’ என்று தட்டிக்கழித்து விட்டாராம்.

ஓவியா இருந்தால் ஆரவ் இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பவில்லை என மறுப்பு தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கொளுத்திப் போடும் வனிதா உள்ளிட்ட தரமான போட்டியாளர்களை பிக்பாஸ் அல்டிமேட் தரையிறக்கம் உள்ளதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆகையால் ஆரவ் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால் போனால் போகட்டும் அடுத்தடுத்த போட்டியாளர்களை பார்ப்போம் என்று பிக்பாஸ் அல்டிமேட் ஒருங்கிணைப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

Trending News