சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அந்தரங்க ரகசியத்தை வைத்து மிரட்டி காசு பார்க்க போட்ட பிளான்.. கடுப்பில் போட்டு தள்ளிய நடிகர்

மனிதர்களின் வாழ்வாதாரமே பணம்தான் என்ற நிலை இப்போது இருந்து வருகிறது. அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பலரும் பல வழிகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அதில் பிரபலம் ஒருவர் திரை நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை வைத்து காசு பார்க்க நினைத்து உயிரை விட்டிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை சம்பவம் தமிழ் திரையுலகையே அதிர வைத்தது. அதாவது மீடியாவில் சர்ச்சை பிரபலமாக இருந்த ஒருவர் டாப் நடிகர் ஒருவரால் கொல்லப்பட்டது யாராலும் நம்ப முடியாத ஒன்றாக அப்போது இருந்தது. இதற்கு காரணமாக பல விஷயங்கள் கூறப்பட்டாலும் நடிகருக்கு இருந்த தனிப்பட்ட பகை தான் காரணம் என்ற ரீதியில் பேச்சு எழுந்தது.

Also read: அடுத்தடுத்து ஊத்திக் கொள்ளும் படங்கள்.. திருட்டு கதையை கையிலெடுத்த நடிகர்

அது மட்டுமல்லாமல் அந்த நடிகரின் தவறான போக்கு தான் இதற்கு மூல காரணம் என்று உறுதியும் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த பிரபலத்தின் மரணத்திற்கு முக்கிய காரணம் அவருடைய பணத்தாசை மட்டும் தான். பொதுமக்கள் மத்தியில் பேரும், புகழுடன் இருக்கும் சினிமா நட்சத்திரங்களை பற்றி மோசமாக எழுதினால் காசு வரும் என்பதை புரிந்து கொண்ட அந்த பிரபலமும் தன் வேலையை நன்றாகவே செய்தார்.

இதனால் சில எதிர்ப்புகள் கிளம்பினாலும் தொடர்ந்து அவர் நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை படுமோசமாக வெளியிட ஆரம்பித்தார். ஆனால் இது மட்டும் பத்தாது என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட நடிகர்களை சில ஆதாரங்களை காட்டி மிரட்டும் வேலையையும் அவர் செய்திருக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கில் பணமும் அவர் சம்பாதித்து இருக்கிறார்.

இந்த பணத்தாசை தான் அவருக்கு எமனாக முடிந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பிரபலத்தின் தொல்லையை தாங்க முடியாத அந்த நடிகர் இவரை கடுப்பில் போட்டுத் தள்ளி இருக்கிறார். இதற்காக அவர் தண்டனையையும் அனுபவித்தார். புகழின் உச்சியில் இருந்த நடிகர் இப்படி ஒரு விஷயத்தை செய்தது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் கோபத்தில் ஒரு விஷயத்தை செய்த நடிகர் தண்டனை காலம் முடிந்த பின் ஆன்மீக வழியில் சென்றது குறிப்பிடத்தக்கது.

Also read: முழு ஐட்டம் நடிகையாக மாறும் அனிகா.. மேடையில் நடந்த படு மோசமான சம்பவம்

Trending News