செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Vadivelu : என்னோட நிஜ வாழ்க்கை கதை தான் கவினின் ஸ்டார் படம்.. வடிவேலுவால் கேரியரை இழந்த பிரபலம்

வடிவேலுவால் கேரியரை இழந்ததாக கூறும் பிரபலம் ஒருவர் ஸ்டார் படம் என்னுடைய நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் என்று கூறியிருக்கிறார். அதாவது சமீபத்தில் கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படம் இப்போது வசூலை குவித்து வருகிறது.

அந்த வகையில் சினிமாவில் போராடும் இளைஞன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் நடித்திருந்தார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

அதாவது ஸ்டார் படம் வெளியானதும் தான் நடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பலரும் தொலைபேசி வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் இயக்குனர் என்னிடம் கூறினார்.

ஸ்டார் படம் என்னுடைய கதை என்று கூறிய பிரபலம்

அதாவது திறமையுடன் சினிமாவுக்கு வருபவர்களை காலில் போட்டு மிதிப்பதும், திறமையை இல்லாதவர்களை கோபுரத்தில் ஏற்றி விடும் தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக திறமையுள்ளவர் மேலே வருவார் என்பதை இயக்குனர் கூறினார்.

இயக்குனர் இளன் வயதில் சிறியவராக இருந்தாலும் இதை உணர்வு பூர்வமாக கூறியிருக்கிறார். காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்தது. சிலரின் சூழ்ச்சியால் என்னால் சினிமாவில் நிலைத்திருக்க முடியவில்லை. இப்போது மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஸ்டார் கதை என்னுடைய கதையுடன் பொருந்தும் என்று காதல் சுகுமார் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக வடிவேலுவை போல் தான் நடித்ததால் என்னை கூப்பிட்டு ஆள் வைத்து, அடித்து மிரட்டியதாக கூறியிருந்தார். மேலும் என்னிடம் இனி மேல் அவரைப் போல் நடிக்க மாட்டேன் என எழுதி கையெழுத்து வாங்கினார் வடிவேலு என்று கூறி பரப்பரப்பை கிளப்பினார் காதல் சுகுமார்.

Trending News