வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நறுக்குன்னு கேட்ட கேள்வி.. சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய பிரபலம்

தற்போது டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் இவர் மீது பல விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பின் மூலம் இந்த இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி தேசிய விருது வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

சூர்யாவின் ஜெய் பீம், சூரரைப் போற்று படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. தற்போது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்த வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

Also Read :சூர்யாவிற்கு வந்த பெரிய ஆபத்து.. பேராபத்தில் சிக்க வைத்த சிறுத்தை சிவா

மேலும் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். இவ்வளவு உயரங்களை அடைந்த சூர்யாவின் தொடக்க காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அவர் நடித்த எந்த படங்களுமே சரியாக போகாமல் தொடர்ந்து மோசமான விமர்சனங்கள் எழுந்து வந்துள்ளது.

அந்த சமயத்தில் சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளார் ரகுவரன். அப்போது ரயிலில் இருவரும் பயணிக்கும் போது சூர்யா உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ரகுவரன் எழுப்பி, உனக்கு உறக்கம் வருகிறதா என கேட்டுள்ளார். நம்மைப் பற்றி இழிவாக பேசுபவர்கள் வாயை அடைப்பதற்கு வெற்றி ஒன்றுதான் வழி.

Also Read :நல்ல கதை, ஹீரோ அமைந்தும் படுதோல்வியான படம்.. ரகுவரன் நடிப்பில் அசத்தியும் பயனில்லை

ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியாமல் இருக்கும் உனக்கு எப்படி தூக்கம் வருகிறது. வெற்றியை ருசித்த பிறகு தான் இரவில் நன்றாக தூக்கம் வரும் என ரகுவரன் கூறியுள்ளார். அவர் சொன்னதை சூர்யா ஒரு பாடமாக எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பின்பு கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு தான் காக்க காக்க, பிதாமகன், நந்தா என்று வெற்றியை கண்டுள்ளார் சூர்யா. மேலும் ரகுவரனின் அந்த ஒரு வார்த்தை என் வாழ்க்கையை மாற்றியதாக பல பேட்டிகளில் சூர்யா கூறியுள்ளார். அந்த விடாமுயற்சியால் தற்போது வரை சூர்யா சினிமாவில் வெற்றி நடிகராக வலம் வருகிறார்.

Also Read :கமல், விக்ரமிற்கு டஃப் கொடுக்கும் சூர்யா.. ஒரே படத்தில் இத்தனை கெட்டப்புகளா?

Trending News