செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமல்ஹாசனை வியக்க வைத்த பிரபலம்.. இறுதிவரை அவருடன் இணைய முடியாமல் போன துரதிர்ஷ்டம்

தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதர் தான் கமல்ஹாசன். புதுப்புது விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும் இவர் நம் தமிழ் திரையுலகிற்கு பல புது டெக்னாலஜிகளையும், யுக்திகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதனாலேயே இவர் ரசிகர்களால் உலக நாயகன் என்று போற்றப்பட்டு வருகிறார்.

பலருக்கும் கமல்ஹாசன் உடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கமலுக்கு திரையுலகில் ஜாம்பவான்களாக இருந்த மூன்று நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. அதில் இரண்டு நடிகர்களுடன் அவர் நடித்து விட்டார். ஒருவருடன் மட்டும் நடிக்கும் பாக்கியம் அவருக்கு இறுதிவரை கிடைக்கவே இல்லை என்பதுதான் சோகம்.

Also read:கமலுடன் கூட்டணி சேர்ந்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. கைமாறிய பல கோடி பணம்

அந்த வகையில் அவருக்கு நகைச்சுவை மன்னனாக ரசிகர்களை கவர்ந்த நாகேஷ் உடன் இணைந்து நடிக்க ஆசை இருந்தது. அந்த ஆசையும் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் நிறைவேறியது. அதேபோன்று பல வெற்றி திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் இருந்தவர்தான் மௌலி.

அவருடன் இணைந்து நடிக்கவும் கமல் ஆசைப்பட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் இவர்கள் இருவரும் காதலா காதலா திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அது மட்டுமல்லாமல் அவருடைய இயக்கத்திலும் கமல் நடித்திருக்கிறார். இப்படி கமலின் ஆசை இவர்கள் இருவர் விஷயத்திலும் நிறைவேறியது. ஆனால் இயக்குனரும் நடிகருமான விசுவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.

Also read:தலைகணத்தில் தலைகால் புரியாமல் ஆடும் போட்டியாளர்.. குட்டு வைக்க போகும் பிக்பாஸ்

குடும்பங்களை கவரும் வகையில் சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் விசு. இயக்குனராக மட்டுமல்லாமல் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமையாலும் இவர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நல்ல திறமையான பேச்சாளராகவும் இருக்கக்கூடிய இவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் கமலின் ஆசையாக இருந்திருக்கிறது.

ஆனால் இவர்களால் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து பணியாற்ற முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமையாமல் போனது. ஆனால் அதிலும் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் திரைப்படம் தான். அந்தப் படத்திற்கான கதை, திரைக்கதையை விசு தான் எழுதினார். அந்த வகையில் இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் அவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு கருவியாக இருந்திருக்கிறது.

Also read:அதிரடி அவதாரத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்.. ஆடிப்போன ஆண்டவர்!

Trending News