வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலரை விட லியோ தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்.. பொறாமையில் பேசிய 62 வயது சில்வர் ஜூப்ளி நடிகர்

Jailer, Leo: ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் மாஸ் காட்டிவிட்டார் என புகழ்ந்து பேசி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் படக்குழுவுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் 62 வயது சில்வர் ஜூப்ளி நடிகர் ஒருவர் ஜெயிலர் படத்தை பற்றி பேசி இருக்கிறார்.

அதுவும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல படத்தை புகழ்ந்து பேசி இறுதியில் ஒரு செக் வைத்து இருந்தார். இதற்கெல்லாம் காரணம் ஒரு காலத்தில் ரஜினியின் போட்டி நடிகராக இருந்த இவர் சில காரணங்களினால் மார்க்கெட்டை இழந்து விட்டார். இப்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறார்.

Also Read : இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்து தூக்கிவிட்ட ரஜினி.. நன்றி மறவாமல் உணர்ச்சிப்பூர்வமாக பேசிய ஜெயிலர் பட நரசிம்மா

சினிமாவில் 80ளில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் ராமராஜன். இவருடைய படங்கள் வெள்ளி விழா கண்டது மட்டுமின்றி வசூலிலும் பட்டையை கிளப்பி வந்தது. மேலும் ரஜினியின் படங்களை தோற்கடித்து ராமராஜன் முன்னேறி போய்க்கொண்டிருந்தார். அவருடைய திருமண வாழ்க்கையால் சில பிரச்சனைகளை சந்தித்தார்.

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த ராமராஜனுக்கு இப்போது தான் ஹீரோ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை பற்றி ராமராஜன் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இப்போது அவருடைய படங்கள் இவ்வளவு வசூல் செய்தது என்று கேள்விப்பட்டேன்.

Also Read : டாப் ஹீரோவின் மார்க்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய ஜெயிலர்.. நூறிலிருந்து 650 தியேட்டர்களை உயர்த்திய சம்பவம்

ரஜினி இந்த வயதிலும் படங்களில் நடித்து பாராட்டுக்கள் பெறுவதுடன், இவ்வளவு வசூல் செய்யும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஜெயிலர் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. லியோவின் வியாபாரம் மிக அதிகமாக இருப்பதாகவும், வியாபாரத்தில் ரஜினிகாந்தை தாண்டிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ராமராஜன் பொதுவான கருத்தை கூறியிருந்தாலும் அவருக்குள் ஒரு பொறாமை இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது தன்னோடு போட்டி போட்ட நடிகர் ரஜினி இமயமலை போல் உயர்ந்து 200 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் உயர்ந்துள்ளார். அவர் படம் 500 கோடி வசூல் செய்கிறது. இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் ரஜினி படத்தை விட விஜய் படம் நன்றாக வசூல் செய்யும் என்று கூறுகிறார்.

Also Read : ரஜினி ஜெயிலர் படத்தால் பழையபடி வரும் ஹீரோ வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் சும்மா ஸ்விங்ன்னு ஏரிய சம்பளம்

Trending News