சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மூளையை கழட்டி வச்சிட்டு படம் பார்க்க போங்க.. வித்தைக்காரணை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்

Vithaikkaran: வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான படம் தான் வித்தைக்காரன். படத்தின் பெயரை பார்த்ததுமே தெரிந்திருக்கும். இது மேஜிக் சம்பந்தப்பட்ட கதை என்று. அதன்படி ஹீரோ சதீஷ் வித்தை காட்டும் மேஜிக் மேனாக இதில் நடித்திருக்கிறார்.

விமான நிலையத்தில் தங்கம், வைரம் ஆகியவற்றை கடத்தும் கும்பலுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றிய கதைதான் இப்படம். ஏற்கனவே தமிழ் சினிமாவில் பார்த்து புளித்த கதையாக இருந்தாலும் கூட அதை இயக்குனர் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருந்தால் நிச்சயம் ரசிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் படம் டார்க் காமெடி என்ற பெயரில் எரிச்சலை கிளப்புகிறது. அதிலும் ஹீரோ வித்தையே தெரியாத வித்தைகாரனாக இருக்கிறார். ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டும் அவர் மேஜிக் செய்வது போல் ஏதோ செய்கிறார்.

Also read: Ranam Aram thavarel movie Review- காவல்துறைக்கு தண்ணி காட்டும் கொடூர மரணங்கள்.. அறம் ரணம் தவறேல் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

வழக்கமாக இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கப் போகும்போது மூளையை கழட்டி வைத்துவிட்டு போக வேண்டும். அப்படித்தான் இந்த வித்தைக்காரன் படமும் இருக்கிறது. பொதுவாக ஒரு தனி உலகத்திற்குள் நம்மை கொண்டு செல்லும் இயக்குனர்கள் அந்த உணர்வை ரசிகர்களுக்கு கொடுப்பார்கள்.

ஆனால் வித்தைக்காரன் அப்படி கிடையாது. ஒரே ஒரு சீனை வைத்து இரண்டாம் பாதி முழுவதையும் ஓட்டி விட்டார்கள். மொத்தத்தில் படத்தில் லாஜிக்கே கிடையாது என ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை போட்டு பொளந்து கட்டி இருக்கிறார்.

வாராவாரம் புது படம் ரிலீஸ் ஆனாலே இவருக்கு கொண்டாட்டமாக இருக்கும். பாராபட்சம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களையும் இவர் வச்சு செய்து விடுவார். அதன்படி தற்போது வித்தைக்காரன் மூலம் சதீஷையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார் ப்ளூ சட்டை.

Also read: Manjummel Boys Movie Review- குணா குகையில் சாத்தானிடம் சிக்கிய 11 பேரின் நிலைமை என்னாச்சு? ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ அனல் பறக்கும் முழு விமர்சனம்

Trending News