செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பீகார், ஆந்திராவை குஷிப்படுத்திய மத்திய அரசு.. 4 காரணங்களால் தமிழகத்திற்கு நாமம் போட்ட நிம்மி மேடம்

Budget 2024-25: மூன்றாவது முறையாக பிரதமரான மோடி தலைமையில் 2024-25 ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் வேண்டும் என்றே அவர் தமிழையும் தமிழகத்தையும் புறக்கணித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இந்த முறை தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் பீகார் மாநிலத்திற்கு 26,000 கோடியும் ஆந்திராவுக்கு 15,000 கோடியும் ஒதுக்கி நித்திஷ் குமார், சந்திரபாபு நாயுடுவை சந்தோஷப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு.

இப்படியாக தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அக்கறையின்மை, மக்கள் தேர்தலில் வாக்களிக்காதது, காழ்ப்புணர்ச்சி, எதிர்க்கட்சிகள் ஆள்வது ஆகியவைதான் நிதி ஒதுக்காததற்கு காரணமாக இருக்கிறது.

மேலும் பிகார், ஆந்திரா மாநிலங்களுக்கு இத்தனை கோடி நிதி ஒதுக்கியதும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தான். ஒரு வேளை அவர்களை குஷிப்படுத்தவில்லை என்றால் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள். அந்த பயத்தில் தான் மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டை கண்டுக்காத மத்திய அரசு

இதன் மூலம் அந்த இரு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு மோடிஜி அல்வா கொடுத்துவிட்டதாக நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார். அதே போன்று எடப்பாடி பழனிச்சாமி, பேராசிரியர் ஜோதி சிவஞானம் உள்ளிட்ட பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

சாதாரண குடி மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்த பலனும் இல்லை என எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறாக இந்த பட்ஜெட் தாக்கல் அனைத்து தரப்பிலிருந்தும் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தங்க இறக்குமதியின் சுங்கவரி குறைந்ததால் இன்று தங்கத்தின் விலை 2080 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 54,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறாக பட்ஜெட் வேலை வாய்ப்பு, பெண்கள் நலத்திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டிருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை நாமம் போட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் மீது வன்மத்தை கட்டிய ஆளும் கட்சி

Trending News