சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

அடுத்தடுத்து வெளியான துணிவு படத்தின் கேரக்டர்கள்.. மொத்த சஸ்பென்சை உடைத்த படக்குழு

ஹெச் வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் தனது படத்திற்கான பிரமோஷனில் எப்போதுமே கலந்து கொள்ள மாட்டார். இப்போது துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு படம் வெளியாகிறது.

ஆகையால் சமீபத்தில் பிரம்மாண்டமாக வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெற்றது. எனவே இப்போது துணிவு படத்தைக் காட்டிலும் வாரிசு படத்திற்கு தான் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு துணிவு படக்குழு அந்தப் படத்தின் கேரக்டர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளது.

Also Read : புர்ஜ் கலீபாவை குறி வைக்கும் துணிவு படக்குழு.. டிசம்பர் 31 நடக்கப்போகும் தரமான சம்பவம்

இதனால் படத்தின் சஸ்பென்ஸ் வெளியாகி உள்ளது. மேலும் இதில் யார் நடிக்கிறார்கள் என்ன கதாபாத்திரம் என்பதை தற்போது பார்க்கலாம். முதலாவதாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன் சுந்தரம் துணிவு படத்தில் மைபா எனும் தொலைக்காட்சி செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகி உள்ளது.

இவரைத் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் பிரேம் துணிவு படத்தில் பிரேம் என்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பார்க்காத காணும் படத்தின் மூலம் பிரபலமான பக்ஸ் இந்த படத்தில் ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read : மணி ஹீஸ்டை நம்பி கோடிகளை செலவழித்த நெட்பிளிக்ஸ்.. துணிவு படத்தின் ஓடிடி ரைட்ஸ் எவ்வளவு தெரியுமா?

இதைத்தொடர்ந்து ஜான் கொக்கன் துணிவு படத்தில் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் வீரா இந்த படத்தில் ராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் துணிவு படத்தில் ஜி எம் சுந்தர் நடிப்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த படத்தில் முத்தழகன் என்ற கேரக்டரில் இவர் நடித்துள்ளார்.

நடிகர் அஜய், ராமச்சந்திரன் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி துணிவு படத்தில் போலீஸ் தயாளன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கடைசியாக துணிவு படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் கண்மணியாக நடித்துள்ளார். இந்த கேரக்டர் போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : ரஜினியை பின்பற்றி வளர்ந்து வரும் விஜய், அஜித்.. வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு, துணிவு பட பிரமோஷன்

Trending News