புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நிஜத்திலும் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி.. காதலியை கழட்டி விட்டு விவாகரத்து நடிகையுடன் செட்டிலான ஹீரோ

விவாகரத்து நடிகை இளம் ஹீரோ ஒருவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நடிகை பல கருத்து வேறுபாடுகளின் காரணமாக இப்போது சிங்கிளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த பிரிவுக்கு நடிகையின் போக்கு சரியில்லை என்று பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவருடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தது தான் நடிகையை கோபப்படுத்தி இருக்கிறது. அதனாலயே அவர் கல்யாணமும் வேண்டாம், நீயும் வேண்டாம் என அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு வந்து விட்டார்.

Also read: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை.. சினிமாவும் காலை வாரிவிட்டதால் சாமியாரான கொடுமை

அதைத்தொடர்ந்து சுதந்திர பறவையாக மாறிய நடிகை தன் இஷ்டத்திற்கு நடித்து வந்தார். இது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் நடிகை அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அதில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ஒரு படத்தின் ஹீரோவுடன் அவர் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறாராம்.

காதல் சம்பந்தப்பட்ட கதையில் ரொம்பவும் கெமிஸ்ட்ரியோடு நடித்திருக்கும் இந்த ஜோடி நிஜத்திலும் அதை ஒர்க் அவுட் செய்து விட்டதாக ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த நடிகர் இளம் நடிகை ஒருவருடன் காதலில் இருந்தார்.

Also read: அப்பா வயது தொழிலதிபருடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த நடிகை.. போலீஸ் ரெய்டில் சிக்கிய சம்பவம்

ஆனால் அந்த நடிகையோ இப்போது அக்கட தேசத்தில் பிஸியாகி விட்டார். இதனால் சலித்து போன இந்த நடிகர் காதலியை கழட்டி விட்டு விவாகரத்து நடிகையுடன் செட்டில் ஆகிவிட்டாராம். எப்போது வேண்டுமானாலும் இந்த ஜோடியின் ரகசிய உறவு வெளிச்சத்திற்கு வரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending News