புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நிஜத்திலும் தாறுமாறாக ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி.. இளம் நடிகருடன் நடிகை செய்த சேட்டை

கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். அப்படி ஒரு கதை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. முன்னணி நடிகை ஒருவர் வாழ்க்கையில் பல சோதனையை கடந்து மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்.

அதற்கான முயற்சியில் இருக்கும் அவர் இளம் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவது தான் இப்போது திரை உலகின் பரபரப்பு செய்தியாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு நடிகையை காதலித்து வந்த அந்த ஹீரோ இப்போது இந்த நடிகையின் பக்கம் சாய்ந்ததே பழைய காதலியை வெறுப்பேற்ற தானாம்.

Also read: பழைய காதலை புதுப்பித்துக் கொண்ட நடிகை.. வயித்தெரிச்சலில் இருக்கும் ஹீரோவின் ரகசிய காதலி

அக்கட தேசத்தில் வாய்ப்பு கிடைத்ததும் காதலனை கழட்டி விட்டு சென்ற அந்த நடிகை இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பி கொண்டிருக்கிறாராம். அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த ஹீரோ புது காதலியுடன் அடிக்கடி ரகசிய மீட்டிங் போட்டு வருகிறாராம்.

அதிலும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கும் இந்த ஜோடி தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வெளிப்படையாகவே தங்கள் நெருக்கத்தை காட்டினார்கள். ஆனால் இதெல்லாம் படத்திற்கான ப்ரமோஷன் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் இந்த ஜோடி தற்போது அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார்களாம்.

Also read: பெரும் புள்ளிகளை வளைத்து போடும் சீரியல் நடிகை.. அந்தரங்க வேலை பார்த்து வாய்ப்பை பிடிக்கும் கேவலம்

அதாவது நடிகைக்கு இருக்கும் பிரச்சனையை பார்த்து உருகிப் போன அந்த நடிகர் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். இதனால் மெர்சலாகி போன நடிகை காதலுக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கே ஓகே சொல்லி விட்டதாக ஒரு தகவல் காத்து வாக்கில் பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நிஜத்திலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில் இந்த ஜோடி அந்தரங்கமாக பழகி வருவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Trending News