சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

எதிர்க்கட்சித் தலைவரை விவாதத்திற்கு அழைத்த முதல்வர்.. தாறுமாறாக பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்ட வாரியாக சென்று தனது கட்சியின் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டாராம்.

மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடியார் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை மீண்டும் தனி விவாதத்திற்கு அழைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சரக்கு இல்லாததால் விவாதத்திற்கு வர ஸ்டாலின் பயப்படுகிறார்  என்று எதிர்க் கட்சித் தலைவரை சரமாரியாக கிண்டல் அடித்துள்ளார் முதல்வர்.

அதாவது தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை பிரச்சாரத்திற்காக போகுமிடமெல்லாம் சுமத்தி வரும் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது, துண்டு சீட்டு இல்லாமல் தனியாக மக்கள் மத்தியில் மேடை போட்டு தனி விவாதத்திற்கு வருமாறு ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின் வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்ற மழுப்பலான பதில்களை கூறி நழுவி வந்தார்.

edappadi-admk

இதனைத் தொடர்ந்து இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் தனியாக வந்தால் பதிலளிக்க தயார் என்றும் விவாதத்திற்கு தயார் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். இதற்கும் கழுவுற மீன்ல நழுவுற மீன் போல சாக்கு சொல்லி தப்பித்தார் ஸ்டாலின். இதனால் நெட்டிசன்கள் ‘பயந்து ஓடும் ஸ்டாலின்’, ‘துண்டு சீட்டு ஸ்டாலின்’ என்று சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினை கிண்டலடித்தனர்.

இது ஒருபுறமிருக்க சென்னையில் தனது நான்காவது கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் ஸ்டாலின், நேரில் விவாதிக்க தயாரா என்று மீண்டும் சவால் விடுத்தார். மேலும் தேர்தலுக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் தற்போதாவது ஸ்டாலின் தனது சவாலை ஏற்று விவாதத்திற்கு வருவார் என்று முதலமைச்சர் அழைத்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.

தற்போது ‘பயந்து ஓடும் ஸ்டாலினை விடாது கருப்பாக சவாலுக்கு முதலமைச்சர் அழைக்கிறார்’ என்றும், ‘கண்டா வர சொல்லுங்க என்று ஸ்டாலினை முதலமைச்சர் கூப்பிடுகிறார்’ என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சி தலைவரை பங்கம் செய்து வருகின்றனர்.

Trending News