புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சொன்னதை செய்து காட்டிய தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் திளைக்கும் சாமானிய விவசாயிகள்!

தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரது நலத்திட்டங்களால் தற்போது தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்வதோடு மட்டுமில்லாமல், தொடர்ந்து அடுத்ததாக புதிய நலத் திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.

சமீபத்தில்கூட முதல்வர் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார். இதனைத்தொடர்ந்து எடப்பாடியார் 10 நாட்களுக்குள் வேளாண் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட ரசீது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயன் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அதாவது தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 14.63 லட்சம் விவசாயிகள் 12, 110 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இவர்களுடைய கடன் தொகை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரசீது வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழ்வாய்வு பணிகளையும் காணொலிக் காட்சி வாயிலாக எடப்பாடியார் துவக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் எது நன்மையோ அவற்றைத் தேடி தேடி செய்யும் எடப்பாடியாருக்கு சாமானிய மக்களும், விவசாயிகளும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Trending News